- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-78 30/08/2024
August 30, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்நிகழ்வு-78
நூல்: வான் புகழ் வள்ளுவர் (காமத்துப் பால்)
ஆசிரியர்: தி மாணிக்கவாசகம்
நயவுரையாளர்: திரு சொ. வினைதீர்த்தான்
நாள்:- 30/08/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
தமிழ்ச் செல்வர் கருமுத்து தி மாணிக்கவாசகம் அவர்கள் கல்வித்தொண்டிலும், தொழிற்துறையிலும் நிகரற்று விளங்கிய குடும்பத்தில் மதுரையில் பிறந்தவர். இலக்கியத்தில் சிறந்த இவர், தமிழில் திறனாய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியர். தந்தையைப் பின்பற்றி நனிசிறந்த எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். புகழ்பெற்ற தினசரி ‘தமிழ்நாடு’ என்ற செய்திதாளின் ஆசிரியராகவும் முக்கியப் பங்கு வகித்தார். ‘வான் புகழ் வள்ளுவர்’ என்ற தலைப்பிலே அறம், பொருள், இன்பம் என மூன்று நூல்களை யாத்துள்ளார். 1965ம் ஆண்டில் வெளியான, காமத்துப்பால் குறித்த இந்நூலை, மதுரை மீனாட்சி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
நயவுரையாளர் குறிப்பு:
சொ. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) உயர் பொறுப்பான, கோட்டமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பணி ஓய்விற்குப் பிறகு, வாழ்வியல் திறன் மற்றும் தன்முன்னேற்றப் பயிற்சியாளராக தன் சேவையைவும் தொடர்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக தன்முன்னேற்றப் பயிற்சி அளித்து வரும் இவர் 30,000ற்கும் அதிகமான மாணவர்களை சந்தித்து இருக்கிறார். Zoom வழியாக 300க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். தமிழ் ஆர்வலர். கம்பன் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மற்றும் பஞ்ச் குருகுலம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். புகழ்பெற்ற இந்தியக் காப்பீட்டுக் கழகத்தின்(FIII) மதிப்புறு உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர்.