Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-77 23/08/2024

August 23, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்

நிகழ்வு-77
கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சொற்பொழிவாற்றும்
சிறப்புத் தொடர்-6

நூல்: திருக்குறள் புதைபொருள்
ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
நயவுரையாளர்: செல்வி சுபாஷினி பாலகணேஷ்

நாள்:- 23/08/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
இந்நூலில் 12 திருக்குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. முதல் எட்டுக் குறள்களில் புதைபொருள்களும், பின் நான்கு குறள்களில் மறைபொருள்களும் விளக்கப் பெற்றுள்ளன. திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்துவந்து, அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்விதின் எடுத்துக் காட்டியுள்ளார் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள். முத்தமிழ்க் காவலர் எனப் போற்றப்பெறும் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய இந்நூலை, பாரி நிலையம் (1956) வெளியிட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்திலும் வாசிக்கக் கிடைக்கிறது, இந்நூல். இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி என்று 12 துறைகளில் பலநூறு பேச்சுக்களை முத்தமிழ்க் காவலர் பேசியுள்ளதாக ந. சுப்புரெட்டியார் கூறுகிறார். 2,500 க்கும் அதிகமான திருமணங்களை தமிழ் வழியில் நடத்திவைத்துள்ளார், கி.ஆ.பெ..

நயவுரையாளர் குறிப்பு:
செல்வி சுபாஷினி பாலகணேஷ், செஞ்சியை அடுத்த வளத்தி என்ற ஊரைச் சார்ந்தவர். சென்னை கலாக்ஷேத்ராவில் கருநாடக இசையையும், பரதமும் பயின்றுள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு இளங்கலை, அரசியல் அறிவியல் (Political Science) பயின்று வருகிறார். இளம் வயதில் இருந்தே தமிழ் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் திருக்குறள் வகுப்புகள் மூலம் திருக்குறளை, பரிமேலழகரின் உரை வழி கற்கத் துவங்கியவர். இவ்வகுப்புகளை தொகுப்புரை செய்யும் வாய்ப்பும் பெற்றவர். தொடர்ந்து பல தமிழ் நூல்களை ஆழ்ந்து கற்று, பல மேடைகளில் பேச வேண்டும் என்ற நோக்கோடு பயணித்து வருகிறார். இந்திய குடிமைப் பணி அதிகாரி ஆக வேண்டும் என்பது இவர் கனவு.

Details

Date:
August 23, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,