Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-76 16/08/2024

August 16, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்

நிகழ்வு-76
கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சொற்பொழிவாற்றும்
சிறப்புத் தொடர்-5

நூல்: திருக்குறள் கட்டுரைகள்
ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
நயவுரையாளர்: திரு சீ தீபக்

நாள்:- 16/08/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
“சான்றாண்மையைக் குறிக்கோளாகக் கொண்டு, கயமையின் நீங்கி, அறிவறிந்து, ‘கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம்’ என்பதால் அளவாகச் செல்வம் ஈட்டி, இரத்தலை இகழ்ந்து, குடி முதலிய தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல், அளவாக உழைத்து, ஊக்கத்துடனிருந்து, வீரங்குன்றாமல், சொல்வது போல் செயலாற்றி, மறை மொழியாம் திருக்குறளை மறவாமல் நினைவிற்கொண்டு வாழ்வதால் அமர வாழ்வு எய்தலாம் என்ற திரண்ட கருத்தைப் பத்துக் கட்டுரைகளாக, அழகிய, இனிய, ஆழ்ந்த, நுண்ணிய, செவ்விய நடையில் முத்தமிழ்க் காவலர் நமக்கு வகுத்து வழங்கியிருக்கிறார்”, என மதிப்புரையில் இந்நூல் குறித்து மொழிகிறார், சென்னை பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மொ. அ. துரை அரங்கனார், அவர்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய இந்நூலை பாரி நிலையம் (1958) வெளியிட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்திலும் வாசிக்கக் கிடைக்கிறது, இந்நூல்.

நயவுரையாளர் குறிப்பு:
உரையாளர் திரு சீ தீபக் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்தவர். கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் செயற்குழுவில், மாணவ உறுப்பினராக இயங்கி வருகிறார். நவீன இலக்கியங்களில் அதிக ஈடுபாடு உள்ளவர்; கி. ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் மனதிற்கு நெருக்கமானவர்கள், என்கிறார். விருதுநகர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியில் ‘இளநிலை விலங்கியல்’ படித்து வருகிறார். பழந்தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி பெற்று வருவதாகத் தெரிவிக்கிறார். பிடித்த உரையாசிரியர் கி.வா.ஜ எனக் குறிக்கிறார், இவர். சென்னை கம்பன் கழகம், மதுரை கம்பன் கழகம் உள்ளிட்ட பல்வேறு கம்பன் கழகங்களில் பேசிப் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நடத்திய ‘திறமை பொங்கும் தமிழகம்-2023’ என்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர். தொடர்ந்து பல்வகை இலக்கியங்களையும் ஆழ்நது வாசித்து, பல மேடைகளில் பேச வேண்டும், என்ற நோக்கோடு பயணிக்கிறார்.

Details

Date:
August 16, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,