- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-74 02/08/2024
August 2, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-74
கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சொற்பொழிவாற்றும்
சிறப்புத் தொடர்-3
நூல்: ஐந்து செல்வங்கள்
ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
நயவுரையாளர்: திரு அருள் டேவிட்
நாள்:- 02/08/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
“நண்பர் ஒரு செல்வர்; செல்வங்களைப்பற்றி எழுதுகின்றார். அவர் உயிர்போல் போற்றுகிற தமிழில் எழுதுகிறார்” என முன்னுரையில் குறிக்கிறார் தெபொமீ. முத்தமிழ்க் காவலர் கிஆபெ அவர்கள், கல்விச் செல்வம், பொருட் செல்வம் என நாம் அறிந்த செல்வங்களுக்கு மேலாக, தாய்ச் செல்வம்,
சிந்தனைச் செல்வம்,கிழட்டுச் செல்வம்,
உடற் செல்வம் மற்றும் திருச் செல்வம் எனப் புதிய செல்வங்களை இனம் கண்டு புதிய சிந்தனையைப் புகுத்துகிறார். கிஆபெ அவர்கள் தனக்கே உரிய பாணியில் பசுமரத்தாணி போல் கருத்துக்களை எளிய முறையில் நூலைக் கற்போர் மனத்தில் பதிவு செய்கிறார்.
நயவுரையாளர் குறிப்பு:
திரு அருள் டேவிட் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்தவர். சாத்தூர் ஶ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியில் இரண்டாமாண்டு கணிப்பொறியியல் பயின்று வருகிறார். கம்பராமாயண ஆர்வலர். கோவில்பட்டி கம்பன் கழக மாணவர்.
திருவள்ளுவர் கழகங்களிலும் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். கவிதை மற்றும் கவிஞர்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக கண்ணதாசனின் காதலனாகத் தன்னை அடையாளப்படுத்துகிறார்.
வருங்காலத்தில் ஒரு திரைப்பட பாடல் ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ண கொண்டுள்ள இளங் கவிஞர்.