- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-73 26/07/2024
July 26, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-73
கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புத் தொடர்-2
நூல்: திருக்குறளில் செயல்திறன்
ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
நயவுரையாளர்: திரு இரா.பாபு
நாள்:- 26/07/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
திருவள்ளுவர், யார் பெரியர்? என்ற கேள்விக்கு கூறுகின்ற விடை, பெரியவர்; பணத்தர் அல்லர், நிலத்தர் அல்லர், படித்தர் அல்லர், எழுத்தர் அல்லர், பேச்சர் அல்லர், “செய்வார் பெரியர்” என்று எடுத்துக் கூறும் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், செயல்திறனைப் பற்றி திருக்குறளில் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் விரவி இருக்கின்ற கருத்துகளைத் தொகுத்து இந்நூலில் கூறுகிறார். செய், செய, செயல், செயப்பட்டார் எனச் சொற்பாகுபடுத்தி, செயல்திறனைப் பற்றி உரைக்கும் குறள்களைத் தெள்ளெனச் சுட்டி விளக்குகிறார்.
நயவுரையாளர் குறிப்பு:
நயவுரையாளர் திரு இரா பாபு , பாரதிதாசன் தோன்றிய புதுச்சேரியைச் சார்ந்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் குறித்து உரையாற்றி பரிசு பெற்றவர். புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு அவைகளில் தோன்றி, கவிதை வாசித்து, பரிசு பல பெற்றக் கவிஞர்.