- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-72 19/07/2024
July 19, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-72
கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புத் தொடர்
நூல்: வள்ளுவரும் குறளும்
ஆசிரியர்: முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம்
நயவுரையாளர்: மா விக்னேஸ்வரன்
நாள்:- 19/07/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள் ‘கோவைத் திருவள்ளுவர் படிப்பகத்தார்’ ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவமே ‘வள்ளுவரும் குறளும்’ என்ற இந்த நூலாகும். கோவைத் திருவள்ளுவர் படிப்பகத்தார் அந்த அரிய சொற்பொழிவின் அசைவும் குறிப்பும் உட்பட அனைத்தும் காத்து ஒலிப்பதிவு செய்து, நூல் வடிவாக்கி தந்துள்ளனர். வள்ளுவத்தில் விளங்கப்பெறும் கருத்துக்களை தனக்கே உரிய பாணியில், எளிய நடையில், சுவைபட, சமகால செய்திகளோடு ஒப்புமைப்படுத்தி, நயமுற விளக்கி வரைகிறார் கி.ஆ.பெ. அவர்கள். எடுத்துக்கொண்ட உவமைகளை எல்லாம், சிறுகதைகளாகக் கூறி, விளக்கி, உவமைத் திறனைப் பாராட்டியுள்ளார். 1953ம் ஆண்டு பாரி நிலையத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல், இதுவரை 15 பதிப்புகளை (1999) கண்டுள்ளது.
நயவுரையாளர் குறிப்பு: மா. விக்னேஸ்வரன்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த மா. விக்னேஸ்வரன் அவர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியலில் பட்டம் பெற்றவர். மின்னணுப் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அகில இந்திய குடிமை பணித் தேர்வின் இறுதி நிலையான நேர்முக தேர்வு வரை சென்றவர். கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி மையங்களில் குடிமை பணி தேர்வர்களுக்கு பயிற்சி அளித்து, பல குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கியுள்ளார். தற்போது, தமிழக அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். சிறுவயது முதலே, சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு, பொது மேடைகளில் பேசி வருபவர். தமிழக அரசில், மூத்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.