- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-70 05/07/2024
July 5, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-70
நூல்: குறளோவியம்
ஆசிரியர்: முத்தமிழறிஞர் கலைஞர் மு கருணாநிதி
நயவுரையாளர்: திரு ஸ்டாலின் இராமகிருஷ்ணன்
நாள்:- 05/07/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
“கவிதைநடையை உரைநடையிற் கலந்து அதனைக் கரடுமுரடான கடுந்தமிழ் நடையாக்கி விடாமல் எழில் கூட்டி எளிய நடையில் வழங்கிடும் புதிய நடையொன்றை 1945-ஆம் ஆண்டு நான் ஈரோடு ‘குடியரசு’ அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பில் இருந்தபோதே அறிமுகப்படுத்தினேன் அந்த நடையில் எழுந்ததுதான் குறளோவியம்,” என்கிறார் ஆசிரியர் கலைஞர் மு கருணாநிதி. ‘தினமணி கதிர்’ இதழில் வாரந்தோறும் குறளோவியம் இடம் பெற்றது. அதன் பிறகு ‘குங்குமம்’ வார இதழில் குறளோவியம் தொடர்ந்தது. இந்த நூலில் முன்னூறு குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள குறட்பாக்கள் 354 ஆகும். அறத்துப்பாலில் 76 குறட்பாக்கள். பொருட்பாலில் 137 குறட்பாக்கள். இன்பத்துப்பாலில் 141 குறட்பாக்கள்.
நயவுரையாளர் குறிப்பு:
வேதிப் பொறியியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், பாலிமர் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். வைணவம் குறித்து வலைப்பதிவு செய்து வருகிறார்’திருப்பாவை பாசுரங்களும் அதற்கான பொருள் விளக்கமும்’ மற்றும் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாசுரங்களில் காணப்பெறும் இலக்கியச் சுவை’ என்ற நூல்களின் ஆசிரியர். படிப்பு மற்றும் பணியைத் தாண்டி, தமிழ் இலக்கியத்திலும், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும், பேசுவதிலும் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் ‘முதல்மொழி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். ஏற்கனவே “வழிகாட்டும் வள்ளுவம்” மற்றும் “வள்ளுவம்” நூலின் ‘பொருள் நிலை’ குறித்து இதே நிகழ்வில் பேசி இருக்கிறார்.