Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-69 28/06/2024

June 28, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-69

நூல்: பாமரருக்கும் பரிமேலழகர்
ஆசிரியர்: திரு சி இராஜேந்திரன் I.R.S. (ப/நி)
நயவுரையாளர்: பேராசிரியர் வன்மீக. வெங்கடாசலம்

நாள்:- 28/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
“தொகுத்துச் சொல்லும் பரிமேலழகர் உரைக் குறிப்புக்களை விரித்துச் சொல்லி விளங்க வைப்பதும் சி.இரா. உரையின் தனிப்பண்பாகும்”, என்கிற திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள், “இந்த எளிய உரை அவருடைய ஆழ்ந்த புலமைக்கும், நுண்மாண் நுழை புலத்துக்கும் அடையாளமாகத் திகழ்கிறது”, என இந்நூலுக்கு அணிந்துரை சூட்டியுள்ளார். ஆசிரியர் திரு சி. இராஜேந்திரன் I.R.S. (ப/நி), அவர்கள் இந்திய வருவாய்ப் பணியில் (1985-2019) பணியாற்றியவர். குடியரசுத்தலைவர் விருது பெற்றவர்.  “திருக்குறள் உவமை நயம் (2007)” என்பது திருக்குறள் குறித்த இவரது முதல் நூலாகும். பாமரருக்கும் பரிமேலழகர் என்ற இந்நூல், அவரது பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது (2018). ‘வள்ளுவர் குரல் குடும்பம்’ என்னும் டெலிகிராம் சமூக ஊடகப் புலனத்தையும், www.voiceofvalluvar.org என்ற இணைய தளத்தையும் நடத்தி வருகிறார். இந்நூல் 1,890 பக்கங்களுடன் மூன்று தொகுதிகளைக்  கொண்டது. சந்தியா பதிப்பகம் (2018) இந்நூலை வெளியிட்டுள்ளது.

நயவுரையாளர் குறிப்பு:
ஓய்வுபெற்ற பேராசிரியர் வன்மீக. வெங்கடாசலம் அவர்கள், மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் 35 ஆண்டுகள் கல்விப் பணியாற்றியவர். விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் மற்றும் துணை முதல்வர் எனப் பல்வேறு நிலைகளில் அக்கல்லூரியில் தொண்டாற்றியவர். 30க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை தமிழ் மொழிக்கு அளித்துள்ளார். இவரது “சொல்லித் தெரிவதில்லை” என்ற முதல் கவிதைத்தொகுப்பு 1981ஆம் ஆண்டு கலைஞரது அணிந்துரையில் வெளிவந்தது. உலகத் தமிழ் கவிஞர் பேரவை 2006ஆம் ஆண்டு இவருக்கு “இலக்கியச் செம்மல்”என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. மாயூரம் JCs Club “மாயவரத்தின் பொக்கிஷம்”என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் இவருக்கு ‘தமிழ்க் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. வலைத்தளத்தில்”இலக்கிய இன்பம்” எனும் தலைப்பில் பேசி வருகிறார். பணி நிறைவுக்குப்  பின்னர், “வன்மீகநாதன் பசுமைப் பண்ணை”யில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்.

Details

Date:
June 28, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,