- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-68 21/06/2024
June 21, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-68
நூல்: நிழல் காட்டும் நிஜங்கள்
ஆசிரியர்: திருமதி மலர்க்கொடி இராஜேந்திரன்
நயவுரையாளர்: திரு இளங்கோவன்
நாள்:- 21/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலின் ஆசிரியர் திருமதி மலர்க்கொடி இராஜேந்திரன் சேலத்தைச் சார்ந்தவர். புகழ்பெற்ற சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் படித்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். தனது தந்தையிடமிருந்து சுற்றம் போற்றுதலையும் தாயிடமிருந்து விருந்தோம்பலையும் இயல்பாகவே கற்றுக் கொண்டவர். இவர் “வள்ளுவர் குரல் குடும்பம்” புலனக் குழுமத்தின் நிறுவன-இயக்குநர் திரு சி இராஜேந்திரன் IRS (ஓய்வு) அவர்களின் தகை சான்ற துணைவியாவார். நூலில் அறத்துப்பால் பொருட்பால் இரண்டிலும் உள்ள 108 அதிகாரங்களுக்கும் வரிசையாக 124 கதைகள் அடங்கியுள்ளது. சங்க காலத்தில் தொடங்கி இக்காலம் வரை நடந்த பல நிகழ்ச்சிகள் கதைக் களமாக இருக்கின்றன. சில அதிகாரங்களுக்கு இரண்டு கதைகளும் அமைந்துள்ளன. 124 திருக்குறள் கருத்துகள் மனதில் பதியும்படி கதைகள் வார்க்கப்பட்டுள்ளன.
நயவுரையாளர் குறிப்பு:
திரு இளங்கோவன் அவர்கள் கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 1330 குறட்பாக்களை தென்காசி ஆய்குடி அமர்சேவா சங்க திருக்குறள் முற்றோதுதல் நிகழ்வில், 54 நிமிடங்களில் ஒப்புவித்து பரிசு பெற்றவர். இதற்கு முன்னர், இதே நிகழ்ச்சியில் “திருக்குறள் உவமை நயம்” என்ற நூலிற்கு நயவுரை வழங்கியுள்ளார்.