Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-67 14/06/2024

June 14, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-67

நூல்: டாக்டர் வள்ளுவர்
ஆசிரியர்: டாக்டர் எஸ். முருகுசுந்தரம்
நயவுரையாளர்: திரு இரா கதிரவன்

நாள்:- 14/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)

நூலாசிரியர் குறிப்பு: டாக்டர் எஸ். முருகுசுந்தரம்
டாக்டர் எஸ். முருகுசுந்தரம் அவர்கள், தோல் மருத்துவராக இருபத்தி ஐந்து ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தோல், முடி, நகங்களுக்கான உலகின் முதல், சிறப்பு, தனி மருத்துவமனையான சென்னை தோல் மருத்துவ மையம் மற்றும் யேசுடியான் ஆய்வு நிலையத்தின் நிறுவன இயக்குனர். குறள் மேல் தீராக் காதலும், தன் குருநாதர் டாக்டர் பேட்ரிக் யேசுடியான் அவர்கள் மேல் பக்தியும் கொண்டு வாழ்பவர். இடையறாத மருத்துவப் பணிகளோடு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதும் தமிழ் ஆர்வலர். சமூக ஊடகத்தில் ‘யாணர்’ எனும் கவிஞர் குழுவில் அடிக்கடி இவர் எழுதிப் பகிரும் கவிதைகள் இவரது மொழிப்பசிக்கும் கள்சொல்லுக்கும் சாட்சியங்கள். இவர், ‘இளைஞர்களுக்கு இன்றியமையாத இருபத்தி ஐந்து குறட்பாக்கள்’ என்ற நூலின் ஆசிரியர். டாக்டர் வள்ளுவர் இவரது இரண்டாம் நூல் ஆகும். நூல் வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்.

அறிமுகம் செய்வார் குறிப்புரை: திரு இரா கதிரவன்

இரா கதிரவன் அவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராகவும் மேலாண்மை பொறுப்புகளிலும் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் ஆர்வலர். வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறவர். தினமணி நாளிதழ் மற்றும் சில சிற்றிதழ்களில் அவ்வப்போது தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் ‘முதல் மொழி’ என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். அவ்வமைப்பு நடத்திவரும் மாதாந்திர மின்னிதழ் ஆசிரியர் குழுவின் உறுப்பினர். வள்ளுவர் குரல் குடும்ப உறுப்பினர்; ‘நவில்தொறும் நூல் நயம்’ நிகழ்ச்சிக் குழு உறுப்பினர். சமீபத்தில் இவர் எழுதிய ‘யாம் துஞ்சலமே’ என்ற கட்டுரை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது

Details

Date:
June 14, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,