- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-66 07/06/2024
June 7 @ 6:30 pm - 8:00 pm
https://www.youtube.com/watch?v=S9Xp4zUrrzE
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-66
நூல்: வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
ஆசிரியர்: புலவர் கா கோவிந்தனார்
நயவுரையாளர்: திரு கா. செல்வராசு
நாள்:- 07/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூலாசிரியர் குறிப்பு: புலவர் கா கோவிந்தனார்
தமிழுக்கும், தமிழ் புலவர்கட்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னையே அரப்பணித்த பெருமகனார். புலவருள் புலவராய் விளங்கி குன்றக்குடி ஆதினத்தாரின் “புலவரேறு” பட்டம், தமிழக அரசின் திரு.வி.க விருது மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் “தமிழ் பேரவைச் செம்மல்” பட்டம் பெற்றவர். தமிழில் 71 நூல்களை எழுதிய பெருமகனார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒரு முறையும் பணியாற்றியுள்ளார். செய்யாறு தமிழக சட்ட மன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர். “வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி” நூல் 137 பக்கங்களைக் கொண்டது. அரசினால் நாட்டுடமையாக்கப் பட்ட நூல்.
அறிமுகம் செய்வார் குறிப்புரை: திரு கா. செல்வராசு
முதுநிலை பட்டப் படிப்பு (அரசியல்) முடித்தவர். கனரா வங்கியில் திறம்பட பணியாற்றி முதுநிலை மேலாளராக 2016ல் பணி நிறைவு செய்தவர். திருக்குறளில் இளம்வயது முதல் ஆர்வம் உள்ளவர். இலக்கிய வாசகர். புதுக்கவிதை புனைவதில் நாட்டம் மிகக் கொண்டவர். மனித நேயர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர். 97 ஆண்டு பெருமை மிக்க தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் அண்மையில் “அகநக நட்பே நட்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வாரம் ஒருமுறை நடத்தப்படும் இந்த திருக்குறள் நூல் அறிமுகம் செய்யும் “நவில்தொறும் நூல்நயம்” நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.
வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி(1991)
எழிலகம் வெளியீடு எண் 12
புலவர் கா கோவிந்தனார்
திருவள்ளுவர் இயற்றிய குறட்பா ஒவ்வொன்றின் அளவுச் சிறுமையும், அதுகூறும் பொருட் பெருமையும் அக்குறட்பாக்களை அறிந்த புலவர் பெருமக்களைக் “கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுக தறித்த குறள்” என்றும், “அணுவைத் துளைத்து, ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தக் குறள் ” எனறும் பாராட்ட வைத்துவிட்டன.
அவ்வாறு பரந்த பொருளை சுருங்கிய வாய்ப்பாட்டால் கூறுவதால் பெருமை கொண்ட வள்ளுவப் பெருந்தகையார், சொல் இலக்கணத்திற்கு மட்டும்,
1) அவை அஞ்சாமை
2) அவை அறிதல்
3) இனியவை கூறல்
4) கேள்வி
5) சொல்வன்மை
6) பயனிலசொல்லாமை
7) புறங்கூறாமை
8) வாய்மை
என்ற அதிகாரங்களை – அதாவது, எண்பது குறட்பாக்களை ஒதுக்கியிருப்பதோடு, சொல் குறித்து, பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் 33 குறட்பாக்கள் யாத்துள்ளார்.
இவ்வாறு சொல்லிலக்கணத்திற்காக 113 குறட் பாக்களை – அதாவது,தம் முழுநூலின், சற்று குறைய பன்னிரண்டில் ஒரு கூற்றினை ஒதுக்கி இருப்பதன் மூலம் சொற்களைத் தேர்ந்து ஆள்வதில் எத்துணை விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு வற்புறுத்தும் அவர், அவ்வழியில் சொற்களை ஆளாதிருப்பாரோ? “ஓதி உணர்ந்தும். பிறர்க்கு உரைத் தும் தான் அடங்கா பேதையர்” அல்லரே அவர்! ஆகவே உரைத்த வழியே சொற்களைத் தேர்ந்து ஆண்டிருப்பார்; ஆண்டுள்ளார்.
நூல் நயவுரை காணொளி