- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-65 31/05/2024
May 31, 2024 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-65
நூல்: திருக்குறளின் உண்மைப் பொருள்
ஆசிரியர்: கு.ச. ஆனந்தன்
நயவுரையாளர்: முனைவர் இனியன் கோவிந்தராஜூ
நாள்:- 31/05/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் மறைந்த கு.ச. ஆனந்தன் அவர்கள் தமிழக அரசின் 1990 ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெற்றவர். ஈரோட்டிலிருந்து வெளிவந்த ‘குறளியம்’ திங்களிதழின் ஆசிரியர். ‘இலக்கிய முனைவர்’ என புகழாரம் சூட்டப்பட்டவர். ‘குறள் ஞாயிறு’, ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்றெல்லாம் போற்றப்பட்ட குறளறிஞர். அவர் எழுதிய ‘திருக்குறளின் உண்மைப் பொருள்’ என்ற இந்நூல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசு பெற்ற பெருமைக்குரியது. “இது மற்றுமொரு உரைநூல் அன்று; திருக்குறளின் உண்மைப் பொருளைப் பயன்பாட்டுப் பார்வையோடு ஆக்கித் தந்துள்ளேன்” என்பது நூலாசிரியரின் வாக்கு மூலம். பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் வழங்கியுள்ள அணிந்துரையில் “இப்புதுநூலை என் பேரப்பிள்ளையைப் போல போற்றுகிறேன்” என்று குறிப்பிடுகிறார்.
அறிமுகம் செய்வார் குறிப்புரை: முனைவர் இனியன் கோவிந்தராஜூ
தற்போது, ‘வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரியில்’ மனநல ஆலோசகராக பணியாற்றும் கோவிந்தராஜூ அவர்கள், பன்முகத்திறன் படைத்த ஆற்றலாளர். ‘அமுதக்குறள் ஆத்திசூடி’, ‘தமிழ் நாவல்களில் அறவியல் கோட்பாடுகள்’, ‘அருணா தமிழ் இலக்கணம்’ போன்ற பல்வகை நூல்களை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நூல்கள் யாத்துள்ளார். ‘கரூர் திருவள்ளுவர் பேரவை’ வழங்கிய ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது பெற்றவர். இந்திய அரசு வழங்கும் ‘தேசிய நல்லாசிரியர்’ விருதினை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கரங்களில் பெற்றவர். இந்நிகழ்ச்சியில் “வாழும் வள்ளுவம்”, என்ற நூல் குறித்து ஒரு நயவுரை நல்கியுள்ளார்.