- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-64 24/05/2024
May 24, 2024 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-64
வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (13)
நூலின் பன்னிரண்டாவது அத்தியாயமான ‘வாய்மை நெஞ்சம்’ குறித்த நயவுரை
நாள்:- 24/05/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
நயவுரையாளர்: திரு கோ.சக்ரபாணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.
‘வாய்மை நெஞ்சம்’(அத்தியாயம்-12) குறித்து அறிமுகம் செய்பவர்: திரு கோ. சக்ரபாணி
திரு சக்ரபாணி அவர்கள் கும்பகோணத்தைச் சார்ந்தவர். நீண்ட காலம் BSNLல் பொறியாளராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இளம்வயது முதலே தமிழ் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டவர். பல இலக்கிய மேடைகளில் இனிய தமிழ் பேசியும், புதுக்கவிதை பாடியும் இன்பம் கண்டவர். சென்னை வாணுவம்பேட்டையில் சற்றேற அரை நூற்றாண்டாக இயங்கி வரும் ‘திருவள்ளுவர் இலக்கிய மன்ற’த்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில், ‘வள்ளுவரும் வள்ளலாரும்’ என்ற ஊரன் அடிகள் எழுதிய நூலை அறிமுகம் செய்து பேசியுள்ளார். வாரம் ஒருமுறை நடத்தப்படும் திருக்குறள் நூல் அறிமுகம் செய்யும் “நவில்தொறும் நூல்நயம்” நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.