- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-63 17/05/2024
May 17, 2024 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-63
வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (12)
நூலின் பதினோராவது அத்தியாயமான ‘ஆசான் கருத்துரை’ குறித்த நயவுரை
நாள்:- 17/05/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
நயவுரையாளர்: திரு NVK அஷ்ரப்
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.
ஆசான் கருத்துரை'(அத்தியாயம்-11) குறித்து அறிமுகம் செய்பவர்: திரு NVK அஷ்ரஃப்
அஷ்ரஃப் அவர்கள் ‘வள்ளுவர் குரல் குடும்ப’த்தின் மூத்த அடிப்படை உறுப்பினர்களுள் ஒருவர் .
சுற்றுச்சூழலியல் துறையில் நீண்ட காலமாக தொண்டாற்றும் திரு அஷ்ரப், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சமயம், தமிழ் இலக்கியம் அதிலும் குறிப்பாக உலக அற இலக்கியங்களில் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை உலகில் பல நாடுகளில் நடந்த கருத்தரங்களில் சமர்ப்பித்துள்ளார். ‘இலக்கியத்தில் இயற்கை’ என்பது இவருடைய மற்றொரு ஆராய்ச்சித் தளமாக உள்ளது. திரு அஷ்ரஃப், உலகின் 22 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரிதின் முயன்று 1330 குறள்களுக்கும் கணிணி மூலம் கருத்துப் படங்கள் உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியான Thirukkural Translations in World Languages (உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்) என்ற ஆங்கில நூல் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.