Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-61 03/05/2024

May 3, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-61

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (10)

நூலின் ஒன்பதாவது அத்தியாயமான ‘வள்ளுவ அரசு’ குறித்த நயவுரை

நாள்: 03/05/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நயவுரையாளர்: பேரா மு முத்துவேலு

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு,இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘வள்ளுவ அரசு’ (அத்தியாயம்-9) குறித்து அறிமுகம் செய்வார்: பேரா மு முத்துவேலு

சென்னையில் லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். “சட்டத் தமிழ்” என்னும் தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தவர். பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். பல்வேறு சர்வதேச அரங்குகளில் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல நூல்களின் ஆசிரியர். தற்போது தமிழக அரசின் அரசாங்க மொழிகளுக்கான குழுவில் பகுதிநேர உறுப்பினராக இருக்கிறார். பேராசிரியர் முத்துவேலு அவர்கள் இந்நிகழ்ச்சியில் ‘குறள் கூறும் சட்டநெறி’, என்ற நூலை அறிமுகம் செய்து பேசியுள்ளார்.

Details

Date:
May 3, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,