- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-54 15/03/2024
March 15, 2024 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-54
வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-4)
நூலின் மூன்றாம் அத்தியாயமான
‘பொருள் நிலை’ குறித்த நயவுரை
நாள்: 15/03/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.
‘பொருள் நிலை’ (அத்தியாயம்-3) குறித்த நயவுரை:
திரு. ஸ்டாலின் இராமகிருஷ்ணன்
வேதிப் பொறியியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், பாலிமர் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். வைணவம் குறித்து வலைப்பதிவு செய்து வருகிறார்’திருப்பாவை பாசுரங்களும் அதற்கான பொருள் விளக்கமும்’ மற்றும் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாசுரங்களில் காணப்பெறும் இலக்கியச் சுவை’ என்ற நூல்களின் ஆசிரியர். படிப்பு மற்றும் பணியைத் தாண்டி, தமிழ் இலக்கியத்திலும், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும், பேசுவதிலும் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் ‘முதல்மொழி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330