- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-53 08/03/2024
March 8, 2024 @ 6:00 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-53
வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-3)
நூலின் இரண்டாம் அத்தியாயமான
‘பலநிலை அறம்’ குறித்த நயவுரை
நாள்: 08/03/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கி பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினரால் ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.
‘பலநிலை அறம்’ (அத்தியாயம்-2) குறித்த நயவுரை: திரு மு பொன்னியின் செல்வன்
அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் படித்த இவர், தற்போது குடிமைப்பணியில் உள்ளார். இந்திய தகவல் பணியில் பத்தாண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் துணை இயக்குநராக உள்ளார். இந்திய அரசின் பதிப்பகத்துறையில் ஐந்தாண்டு காலம் பணியாற்றிய இவர், தமிழ் மொழியில் பல புதிய நூல்களை பதிப்பிக்கவும் ,அரிய நூல்களை மீள் பதிப்பு செய்யவும் ஆவன செய்தார். நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வம் மிக்கவர். தற்போது ‘வள்ளுவர் குரல் குடும்ப’த்தில் தொடர் பங்களிப்பு செய்வதுடன் ‘நவில்தொறும் நூல்நயம் நிகழ்ச்சி’ ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு இதே நேரம்
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330