Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-42 15/12/2023

December 15, 2023 @ 6:30 pm - 8:00 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-42

நாள்: 15/12/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நூல்: First All-India Tirukkural Seminar Papers
தொகுப்பாசிரியர்: சிந்தனைச் செம்மல் பேரா ந. சஞ்சீவி

நேற்றைய முயற்சி-இன்றைய வளர்ச்சி-நாளைய உயர்ச்சி (PART – 2)

நூல் குறிப்பு:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை 1972ஆம் ஆண்டில் முதல் அகில இந்திய திருக்குறள் ஆராய்ச்சிக் கருத்தரங்கை அப்போதைய துணை வேந்தர் திரு நெ து சுந்தர வடிவேலு அவர்களின் வழி காட்டுதலில் நடத்தியது.

நாடு விடுதலை பெற்ற வெள்ளி விழா ஆண்டில், நம் தாய்த் திருநாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நாட்டின் 15 பல்கலைக்கழகங்களிலிருந்து அப்போது அரசியல் நிர்ணய சட்டத்தில் இருந்த 15 தேசிய மொழிகளிலிருந்தும் அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து அறிஞர்கள் பலர் பங்கேற்ற ஆராய்ச்சிக் கருத்துரைகளின் தொகுப்பே இந்நூல். நாடெங்கிலும் இருந்து 12 அறிஞர்களும், தமிழகத்தில் அப்போது இயங்கிய பல்கலைக்கழகங்களான அண்ணாமலை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் இருந்து நான்கு அறிஞர்களும் பங்கேற்றனர்.

இந்த நூல் முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலமும் பிறகு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமும் வெளி வந்துள்ளது

நூல் அறிமுகம் செய்பவர்: Dr NVK அஷ்ரப்

சுற்றுச்சூழலியல் துறையில் நீண்ட காலமாக தொண்டாற்றும் கால்நடை மருத்துவர் திரு அஷ்ரப் அவர்கள், இருபது ஆண்டுகளாக சமயம், தமிழ் இலக்கியம் ஆகியன சந்திக்கும் புள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், அதிலும் குறிப்பாக அற இலக்கியங்களில் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அஷ்ரஃப் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை உலகில் பல நாடுகளில் நடந்த கருத்தரங்கங்களில் சமர்ப்பித்துள்ளார். இலக்கியத்தில் இயற்கை என்பது இவருடைய மற்றொரு ஆராய்ச்சித் தளமாக உள்ளது. தமிழ் ,மலையாளம் ,இந்தி ,அரபி , ஆங்கிலம் என பன்மொழி அறிஞரான அஷ்ரஃப் அவர்கள், உலகின் 22 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330

Details

Date:
December 15, 2023
Time:
6:30 pm - 8:00 pm
Event Categories:
,

Venue

Chennai
Chennai, India