Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-38 10/11/2023

November 10, 2023 @ 6:30 pm - 8:00 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-38

நாள்: 10/11/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நூல்: குறளில் சமூகப்பணி
ஆசிரியர்: பேரா சண்முக வேலாயுதம்

நூல் குறிப்பு: ‘குறளில் சமூகப்பணி’ என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகப்பணி என்னும் பணிக்கல்வியை (Professional Course) நம் மண்ணின் பண்பாட்டுக்குப் பொருத்தமானதாக மாற்றும் நோக்கில் இந்த நூலை வடித்துள்ளார் முனைவர் க. சண்முகவேலாயுதம். குறளில் சமூகப்பணி விழுமியங்கள், தனிநபர்க்கான சமூகப்பணி, குழு சமூகப்பணி, குடும்பத்தில் சமூகப்பணி, சமுதாயக் கட்டமைத்தல், சமூக நடவடிக்கை, சமூக நல நிர்வாகம், சமூகச் சட்டங்கள், சமூகப்பணி ஆய்வு, சமூகப்பணியாளரின் திறன்கள், குறள் வழியில் சமூகப்பணிக் கட்டமைப்பு என்ற அத்தியாயங்களின்கீழ் இந்நூலை ஒழுங்கமைத்துள்ளார், ஆசிரியர். முனைவர் க. சண்முகவேலாயுதம் 40 ஆண்டுகளுக்கும் மேலான அயராத பணியால், கல்வியாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் களப்பணியாளராகவும் அறியப்படுகிறார்.

நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் புவனேஸ்வரி மகாலிங்கம்

குழந்தை உரிமைகள் மற்றும் கல்வி சார்ந்த களங்களில் பயிற்சி வகுப்புகள் மற்றும் இயக்கங்களின் ஊடாக விழிப்புணர்வு பரப்புரைகளை முன்னெடுத்தவர். யுனிசெஃப் ( UNICEF) நிறுவனங்களில் பணியாற்றியவர். ‘சேவ் த சில்ரன்’ ( Save the Children) நிறுவனத்தின் தெற்காசிய கல்வி மேலாளராக தொண்டாற்றியுள்ளார். அது தொடர்பாக பல்வேறு உலகநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டமும், சமூகப்பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை லயோலா கல்லூரி சமூகப்பணித் துறையில் “குழந்தை நேயப்பள்ளிகள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி சமூகப்பணி துறையில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330

தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org

Karka Kasadara
9445543442
trust@karka.

Details

Date:
November 10, 2023
Time:
6:30 pm - 8:00 pm
Event Categories:
,

Venue

Chennai
Chennai, India