- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-34 13/10/2023
October 13, 2023 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-34
நாள்: 13/10/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: வள்ளுவரும் வள்ளலாரும்
ஆசிரியர்: திரு ஊரன் அடிகள்
நூலாசிரியர் திரு ஊரன் அடிகள் ‘சன்மார்க்க தேசிகன்’ என அழைக்கப்பட்டவர். அவர் சன்மார்க்கம் மட்டுமல்லாமல், பௌத்தம் மற்றும் சைவத்திலும் பெரும்புலமை பெற்றவர். “வள்ளுவரும் வள்ளலாரும்” என்ற இந்த நூலின் முதல் பகுதியில், வள்ளுவரின் காலம், ஊர், சமூகம், தொழில், வாழ்க்கை நிலை ஆகியவற்றையும், திருக்குறள் அமைப்பு முறை, அதன் சிறப்பு, திருக்குறளும் வடமொழி தரும சாத்திரங்களும், திருக்குறளும் ஞானிகளும் என பல தலைப்புகளில், சான்றுகள், இலக்கிய மேற்கோள்கள் பலவற்றைக் காட்டி, தன் கருத்துக்களைச் சொல்கிறார். இரண்டாவது பகுதியில், வள்ளலாரும் வள்ளுவரும், எந்தெந்த கொள்கைகளில் ஒத்த கருத்துடையவர்கள் என்பதைக் காட்ட விழைகிறார், குறிப்பாக துறவறவியலின் பல குறள்களை எடுத்துக் காட்டி விளக்குறார்.
நூல் அறிமுகம் செய்வார்: திரு சக்கரபாணி
திரு சக்ரபாணி அவர்கள் கும்பகோணத்தை சார்ந்தவர். நீண்ட காலம் BSNLல் பணிபுரிந்து செயற்பொறியாளர் நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர். இளம்வயது முதலே தமிழ் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டவர். பல இலக்கிய மேடைகளில் இனிய தமிழ் பேசியும், புதுக்கவிதை பாடியும் இன்பம் கண்டவர். சென்னை வாணுவம்பேட்டையில் 48 ஆண்டுகளாக இயங்கி வரும் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர். வாரம் ஒருமுறை நடத்தப்படும் திருக்குறள் நூல் அறிமுகம் செய்யும் “நவில்தொறும் நூல்நயம்” நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in