- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023
August 4, 2023 @ 6:30 pm - 7:45 pm
முனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் (சுழற்சி 2) உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தை நிறைவு செய்தவர்.
சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் முதலானவற்றை மேற்கொண்டவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். முதுகலை பயின்ற காலத்திலேயே பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்விலும் (UGC – NET) மாநிலத் தகுதித் தேர்விலும் (TNSET) தேர்ச்சி பெற்றவர்.
பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் ‘ஐந்திணை இலக்கியங்களில் அணிநலன்: பதினெண்கீழ்க்கணக்கு’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றுள்ளார். ’கலித்தொகைக் கவிதைமொழி’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட பயிலரங்குகள், முப்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், பதின்மூன்று ஆய்வுக் கட்டுரைகள் எனத் தமது பங்களிப்பைத் தமிழுக்காகத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.