- This event has passed.
நவில்தொறும் நூல்நயம்
March 3, 2023 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம்,
இணைய வழி குறள் நூல்கள்
அறிமுகத் தொடர்
03/03/2023
வெள்ளிக்கிழமை
மாலை 6:30 மணி
நூற்குறிப்பு
நூல்: திருக்குறள் அறம்
நூலாசிரியர்: அழகரடிகள்
தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கும் நூல் திருக்குறள் இந்நூலுக்கு முன்னும் பின்னும் பல நூல்கள் தோன்றினும் தனக்கு ஈடு இணையற்ற சிறப்புப் பெற்ற நூலாகத் திகழ்வது. அறநூல் என்று அடையாளம் காட்ட பெற்ற நூல். திருக்குறள் அறம் குறித்த சிந்தனைகளை பலர் எடுத்துக் கூறியிருந்தாலும் அழகரடிகளின் ‘திருக்குறள் அறம்’ குறித்த நூலுக்குத் தனி இடமுண்டு.
குறள் நெறி பரப்பும் தொண்டில் முதன்மையாகப் பணியாற்றிய பதிப்பகம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அக்கழகத் தூணாக நின்றவர் திரு. ஏ.சுப்பையா அவர்கள். அறிஞர் மு.வ அவர்கள் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பாராட்டி 1968 இல் ‘டாக்டர் மு.வ. திருக்குறள் பரிசு’ என்ற அறக்கட்டளையினை கழகம் உருவாகியது. அவ் அறக்கட்டளையின் முதற் சொற்பொழிவினை “திருக்குறள் அறம்” என்ற பெயரில் நிகழ்த்தியவர் அழகரடிகள் .இவர் கழகப் புலவராக விளங்கியவர். சிவப்பிரகாசர் செந்நெறி சங்க நூற்கட்டுரைகள்,
சங்க இலக்கிய இன்கவித் திரட்டு,
சங்கச் சான்றோர் இயற்றிய தமிழ் மறைச் சிறப்பு (திருவள்ளுவ மாலைக் கருத்துக்கள்) உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். தனித் தமிழ்ப் பற்றாளர் மறைமலையடிகளாரின் மாணவர், இத்தகு சிறப்புகள் கொண்ட அழகரடிகளாரின் சொற்பொழிவினை அச்சாக்கம் செய்து1970 இல் கழகம் வெளியிட்டது.
இந் நூலினையே, இன்றைக்கு பழம்பதிப்பு (அரிய) நூல்களை அச்சிட்டுத் தமிழுக்குச் சீரியத் தொண்டாற்றி வரும் சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் 2020 ஆம் ஆண்டு உயரியத் தாளில் வெளியிட்டுப் பெருமைப் பெற்றுள்ளார்.
இந்நாலுக்கு மிகச் சிறந்த அணிந்துரை ஒன்றை முனைவர் இ. சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதி அணி சேர்த்துள்ளார்.
இந்நூலில் திருக்குறள் அறத்துப்பால் கருத்துகள் ஆராயப் பெறுகின்றன. உலகப் பொதுமறை என்னும் தலைப்புத் தொடங்கி வாழ்க்கை வடிப்புக்கள் ஈறாக பதினோரு தலைப்புகளில் ஆராய்ந்து பல புதிய கருத்துகளை எடுத்துரைக்கிறார்.
இந்நூலின் முடிப்புரையில் தமிழுலகிற்குத் தன்னுடைய விருப்பத்தினையும், எதிர்பார்ப்புகளையும் முன் வைக்கிறார். அவருடைய கனவு நிறைவேறியதா என்பது கேள்விக் குறியே.
இத்தகு சிறப்பு மிகுந்த இந்நூலினை இன்றைய இளைஞர்களுக்கும், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்ட தமிழர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே இந் ’’நவில்தொறும் நூல் நயத்’ தொடரின் நோக்கமாகும்.
தி.தாமரைச்செல்வி (நயவுரை நிழ்த்துபவர்)
முனைவர் தி.தாமரைச்செல்வி புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியர், புதுச்சேரி அரசு கலை கல்லூரிகளில் 30 ஆண்டு கால பயிற்சி அனுபவம் உள்ளவர். தனது இளம் முனைவர் பட்டம் (சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித்துறை) முனைவர் பட்டம் (புதுவை மத்தியப் பல்கலைக் கழகம்) இரு நிலைகளிலும் திருக்குறளில் ஆய்வு செய்தவர். தொடர்ந்து திருக்குறள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். திருக்குறள் பதிப்பு வரலாறு உள்ளிட்ட நான்கு நூல்களின் ஆசிரியர். இலக்கிய இதழ்களில் வெளிவந்த திருக்குறள் கட்டுரைகள் குறித்த நூலடங்கல் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in