- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-15 2/6/2023
June 2, 2023 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-15
நாள்: 02/06/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-I)
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க ராமலிங்கம்
வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட் திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் முதலாவதான இந்நூலில் தவத்திரு வீரமாமுனிவர் மற்றும் அறிஞர் எல்லீஸ் ஆகியோர் உட்பட முதல் ஐந்து கட்டுரைகள் உள்ளன. இத்தொகுதியிலேயே, 125 அறிஞர்களின் தன் விவரக்குறிப்பு அடங்கியுள்ளது. வர்த்தமானர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).
நூல் அறிமுகம் செய்வார்: பேராசிரியர் முனைவர் ப. முருகன்
முனைவர் ப. முருகன் அவர்கள் தற்போது, சென்னையில் உள்ள ‘துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியில்’ தமிழ்த்துறை தலைவராக இருக்கிறார். ‘தமிழ்கவிதைகளில் பாரதியும் பிச்சமூர்த்தியும்’, ‘இன்றையத் தமிழும் எதிர்காலத்தமிழும்’ மற்றும் ‘விதைத்தவனும் விதைகளும்’ ஆகியன இவரது நூல்களில் சிலவாம். இவற்றில் விருது பெற்ற நூலான ‘விதைத்தவனும் விதைகளும்’ ஒரு புதின இலக்கியம் ஆகும். இதுவன்றி, பதிப்புத்துறையிலும் பணிபுரிந்து, பல நூல்கள் வெளிவர தொண்டாற்றியிருக்கிறார். ‘பன்முக நோக்கில் ராமானுசர்’ மற்றும் ‘பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ ஆகியன இவரது பதிப்புகளில் குறிப்பிடத்தக்கன ஆகும். சென்னையில் உள்ள உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம், இவருக்கு “கேள்விச்செல்வர்” விருது வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது. சர்வதேச அரங்குகளில், பல்வேறு பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in
அன்பே நிறை வணக்கம்
வெள்ளிக்கிழமை தோறும்,மாலை 0630 மணிக்கு
*நவில்தொறும் நூல்நயம் *
நிகழ்ச்சியில்
பலரும் பங்கெடுத்து பயன்பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்
இதே குவிய எண்,
இதே இணைப்பு,
இதே நேரம்,
இதே கிழமை