- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-13 19/05/2023
May 19, 2023 @ 6:30 pm - 7:45 pm
நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-13
நாள்: 19/05/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
நூலாசிரியர்: மு வரதராசன்
இருபதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த இந்நூல், திருக்குறளை புதிய ஒளியில் இட்டுச்சென்றது என்றால் மிகையாகாது. இன்பத்துப்பாலை முதலில் தொட்டுப் பின் பொருளையும் அறத்தையும் பற்றி இயம்பும் இந்நூல், திருவள்ளுவர், வாழ்க்கையை எவ்வாறு ஆராய்ந்துள்ளார் என காண விளைவதாக ஆசிரியர் கூறுகிறார். திருவள்ளுவர் கண்டு விளங்கிய உண்மைகள் யாவை, அந்த விளக்கங்கள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வளவில் பயன்படுவது என்பதை தக்க சான்றுகளோடு அணுகுகிறார் ஆசிரியர் முவ. அணிந்துரை நல்கிய திருவிக அவர்கள் இந்நூலில் ‘புது உலக மணம் கமழ்வதாக’ கூறுவார்.
“மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம் பொதுவாழ்க்கை; மனம் வாழும் இடமே தனி வாழ்க்கை. திருவள்ளுவர் காமத்துப்பாலில் காதல் வாழ்க்கையை விளக்கி, காதல் கொண்டவரிடம் கலந்தும்- கரைந்தும் மனம் பண்படும் வகையைக் கூறியுள்ளார்; பொருட்பாலில் பொது வாழ்க்கையை விளக்கி, அறிவின் வழி இயங்கிப் பொதுக் கடமையைச் செய்து மனம் பயன்படும் வகையைக் கூறியுள்ளார்; அறத்துப்பாலில் தனி வாழ்க்கையை விளக்கி அன்பை வளர்த்து அறத்தைப் போற்றி மனத்தூய்மை பெற்று வாழும் வகையைக் கூறியுள்ளார்”
என்கிறார் மு.வ.
நூல் அறிமுகம் செய்வார்: மு பொன்னியின் செல்வன்
அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் படித்த இவர், குடிமைப்பணியில் உள்ளார். இந்திய தகவல் பணியில் பத்தாண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் துணை இயக்கநராக உள்ளார். இந்திய அரசின் பதிப்பகத்துறையில் ஐந்தாண்டு காலம் பணியாற்றிய இவர், தமிழ் மொழியில் புதிய நூல்களை பதிப்பிக்க ஆவன செய்தார். நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வம் மிக்கவர். தற்போது வள்ளுவர் குரல் குடும்பத்தில் தொடர் பங்களிப்பு செய்வதுடன் நவில்தொறும் நூல்நயம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org
Karka Kasadara
9445543442
trust@karka.in
வெள்ளிக்கிழமை தோறும்,மாலை 0630 மணிக்கு
*நவில்தொறும் நூல்நயம் *
நிகழ்ச்சியில்
பலரும் பங்கெடுத்து பயன்பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்
இதே குவிய எண்,
இதே இணைப்பு,
இதே நேரம்,
இதே கிழமை