- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி
February 24, 2023 @ 6:30 pm - 8:00 pm
நவில்தொறும் நூல்நயம் -புதிய தொடர் நிகழ்ச்சி
திருக்குறளுக்கென்று 3000 நூல்களுக்கு மேல் வந்துவிட்டது. உரைநூல்கள் மட்டும் 800க்கும் மேலே வந்துள்ளது
காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை மட்டும் எழுதாமல் ,திருக்குறள் கருத்துகளை தெளிவுபடுத்து வண்ணம் பல நூல்களை எழுதி உள்ளார்கள்.
அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களில் இதுவரை மூன்று நூல்களுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த மூன்று நூல்கள் க த திருநாவுக்கரசு எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம், வ செ குழந்தைச்சாமி எழுதிய வாழும் வள்ளுவம், ஈரோடு தமிழன்பன் எழுதிய வணக்கம் வள்ளுவ என்பன
திருக்குறளில் கூறப்படும் கருத்துகளை பல்வேறு மதத்தினரும் தங்களது மதத்தின் புனித நூலோடு ஒத்துப் போகிறது என்று கூறி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் பிரிவு பட்டு கிடக்கும் மனித சமுதாயத்தை ஒன்றாக இணைக்கும் வலிமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. திருக்குறள் பற்றிய ஆழமான புரிதல் சமூகத்தில் ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்லிணக்கமும் நிலவும்.
இந்த சூழ்நிலையில் வெறும் உரை நூல்களோடு மட்டும் நில்லாமல் குன்றக்குடி அடிகளார் திரு வி க ,மு வரதராசனார் , முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ ,திருக்குறளார் முனுசாமி போன்றஅறிஞர் பெருமக்கள் ஆய்ந்து எழுதிய விளக்கமான நூல்களைப் படித்தால் திருக்குறளைப் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக மக்கள் மனத்தில் பதியும் . அறம் பரவலாகும் . மேலும் இளைஞர்கள் மன எழுச்சியுடன் செயல்படவும் , நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் திறம்பட செயல்புரியவும் இது வழிவகுக்கும்.
இந்தச் சூழலில், வாரந்தோறும் அறிஞர்களின் படைப்பாளிகளின் துணைக்கொண்டு திருக்குறள் நூல்கள் தொடர்பான இணைய வழியாக / அவ்வப்போது நேரிலும் “நவில்தொறும் நூல்நயம்” என்ற தொடரை நடத்த வள்ளுவர் குரல் குடும்பம் ,கற்க கசடற,வலைத்தமிழ், என்ற மூன்று அமைப்புகளும் முடிவு எடுத்துள்ளது
இந்த தொடரினை ஆரம்பித்து வைத்து ,முதல் நிகழ்ச்சியாக அறிஞர் அண்ணாவால் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட திருக்குறள் ஆராய்ச்சி பகுதி 1971 இல் வெளியிட்ட ,இரண்டாவது நூலான பேராசிரியர் க த திருநாவுக்கரசு எழுதிய “திருக்குறள் நீதி இலக்கியம் *”என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் குறித்து உரையாற்றுபவர் மத்திய *செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் திரு இ சுந்தரமூர்த்தி.
இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,இரண்டாம் தளத்தில் 24/02/2023 அன்று மாலை 0630- 0800 நடைபெற உள்ளது
இந்தத் தொடரில் படைப்பாளிகள் குறள் சார்ந்த தங்களது நூல் எழுந்த நோக்கத்தைப் பற்றியும் அது வள்ளுவத்தின் மீது பாய்ச்சும் புதிய வெளிச்சத்தையும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மேலும் குறள் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்த நூல் குறித்தும் உரை நிகழ்த்தலாம்
இது குறித்து மேலும் தொடர்பு கொள்ள voiceofvalluvar1330@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
திருக்குறள் கருத்துகளைப் பரப்ப தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்படும் வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தலைவர் திரு.சி.இராஜேந்திரன் IRS அவர்கள் முன்னெடுப்பில் “நவில்தொறும் நூல்நயம்”
புதிய தொடர் வாரந்தோறும் வெளிவரவிருக்கிறது. இந்நிகழ்வில் திருக்குறள் குறித்து எழுதப்பட்ட நாம் வாசிக்கவேண்டிய, அறிந்துகொள்ளவேண்டிய நூல் ஒன்றினை எடுத்து வாரந்தோறும் சிந்திக்கவிருக்கிறோம்.
வள்ளுவர் குரல் குடும்பம் ,கற்க கசடற, வலைத்தமிழ், ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த முன்னெடுப்பை செய்கிறது.
இதன் தொடக்கவிழா 24/02/2023 அன்று மாலை 6:30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நேரடி நிகழ்வாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு அவர்களின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற “திருக்குறள் நீதி இலக்கியம்” என்ற நூல் குறித்து பேராசிரியர் திரு.இ.சுந்தரமூர்த்தி , துணைத்தலைவர் , செம்மொழி ஆய்வு நிறுவனம் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து நூல் குறித்தும் , திருக்குறள் நூல்கள் கடந்துவந்த பாதை குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் திரு.அரங்க இராமலிங்கம் , திரு.சந்தியா நடராஜன் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வள்ளுவர் குரல் குடும்பம் திரு.சி.இராஜேந்திரன் IRS , பேராசிரியர் திரு.இ.சுந்தரமூர்த்தி, கற்க கசடற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில் ஆகியோருடன் வலைத்தமிழ் சார்பாக நானும் கலந்துகொண்டேன்.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத்திட்டம் , எனைத்தானும் நல்லவை கேட்க , Thirukkural for UNESCO ஆகிய தொலைநோக்கு திருக்குறள் திட்டங்களில் இணையும் ஐந்தாவது மிக முக்கிய முயற்சி “நவில்தொறும் நூல்நயம்”. அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் பயனுற ஆயிரக்கணக்கணக்கான நூல்களை ஆவணப்படுத்தவிருக்கிறது.
YouTube Playlist: “திருக்குறள்-நவில்தொறும் நூல்நயம்”
Weekly Live programs can be watched at ValaiTamil
மேலும் பதிவுசெய்யப்பட்ட காணொளித்தொகுப்பை வள்ளுவர் குரல் குடும்பம் இணையதளத்திலும் காணலாம்
https://www.voiceofvalluvar.org
அன்புடன்
வள்ளுவர் குரல் குடும்பம்
கற்க கசடற
வலைத்தமிழ்
23/02/23