- This event has passed.
முன்னோடித் திட்டம்-1330 அருங்குறளும் சொன்னால் பரிசு
September 9, 2021 @ 7:00 pm - 10:00 pm
*திரு பூவை பி. தயாபரன்*
உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் ( பணி நிறைவு )
புள்ளம்பாடி
பகுதி 2
*முன்னோடித் திட்டம்-1330 அருங்குறளும் சொன்னால் பரிசு*
தனது மகன் திருமூலநாதன் ஒன்றாம் வகுப்பிலேயே 1330 குறளும் மனனம் செய்ததால், 200 மேடைகள் ஏறியதாலும் பள்ளி மாணவர்கள் 1ஆம் வகுப்பு படிக்கும்போதே 1330 திருக்குறளும் கூறினால் பரிசு கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது அதன் விளைவாக 1997 இல் அறிவிக்கப்பட்டது 1998 முதல், தொடர்ந்து வருடம் தோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தி வருகிறார்முதல் மூன்று ஆண்டுகள் தென்காசி அருகே ஆயக்குடி அமர் சேவா சங்கத்தில் நடந்தது. பிறகு துறையூரில் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு புள்ளம்பாடியில் நடக்க ஆரம்பித்தது. இடப்பற்றாக்குறை அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக திருச்சியில் நடக்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கலந்துகொண்டு பரிசு பெறுகிறார்கள். பரிசு கொடுப்பதற்காக யாரிடமும் இவர் பணம் பெறுவதில்லை 2019 ஆம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுவர்கள் 140 பேர் என கிட்டத்தட்ட 700 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அது அமைந்தது65 விழுக்காடு மாணவியர்கள். 35 விழுக்காடு மாணவர்கள்.
பெரும்பான்மையோர் 14 வயதிற்குள்ளாகவே இருக்கிறார்கள். திரு வீபஜெயசீலன் இஆப தூத்துக்குடி நகராட்சி ஆணையராக இருந்தபோது 500 குறள் படத்துடன் சுவர்களில் வரையச் செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக நடத்த முடியவில்லை மற்றபடி எத்தனை பேர் கலந்து கொண்டாலும் பரிசளிக்க தயாராக உள்ளார்காந்தியடிகளுக்கு வார்தா ஆசிரமத்தில் சேவை செய்தவர் குருசாமி நாயுடு.
அவரை அழைத்து மரியாதை செய்தார் 103 வயதில் காலமானார். இவரது பெயர்த்தி பொன்எழிலி 2வயது 3 மாதங்களுக்குள், 240 குறள் மனனமாகச் சொல்லும் திறன் படைத்தவர். ஓய்வூதியர் சங்கத்தில் தொடர் திருக்குறள் சிந்தனை அரங்கம் நடத்தினார் .
22 ஆண்டு குறள் பயணத்தில் இதுவரை, 500 குறள் மனனமாகச் சொல்லி கிட்டத்தட்ட 1000 மாணவர்களும், 1330 திருக்குறளும் கூறி 500 பேர் பரிசு பெற்றிருக்கிறார்கள். இதில் கலந்து கொண்ட 5000 மாணவர்களையும் உள்ளடக்கி ஆய்வு செய்தால், அறம் எவ்வளவு உயர்த்தும் என்பதை அளவிட முடியும். மனத்துக்கு நெருங்கிய இரண்டு குறள்.. மன நலத்திற்காக குறள் எண் 34 “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர”
உடல் நலத்திற்கு
அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
(மருந்து… குறள் எண்:943)
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:212 )
“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” குமர குருபரர்