- This event has passed.
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 17.05.2023
May 17, 2023 @ 6:45 pm - 7:45 pm
வணக்கம்,
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 17.05.2023 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்: திரு த.கண்ணன்
புத்தகம்: Mahatma Gandhi in Tamil
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
(ஆங்கில மொழியாக்கம்: த.கண்ணன்)
இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் நிகழும். பங்கேற்க இணைப்பு: https://meet.google.com/qwy-pozz-oei
பேச்சாளர் பற்றி:
திரு த.கண்ணன் அவர்கள் மேலாண்மை பயின்றவர். பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். சீர்7 (Seer7) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திருக்குறள் மற்றும் காந்தியச் சிந்தனைகளின் அடிப்படையில் தலைமைப் பண்புகளுக்கான வகுப்புகளைப் பள்ளி கல்லூரிகளில் நடத்தியுள்ளார். தற்போது குடும்பத்தோடு பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள சேர்வைகாரன்பாளையம் கிராமத்தில் தங்கி குழந்தைகளுக்கான பயிலகம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள், வலைப்பதிவுகள் எழுதிவருகிறார். “காந்திய காலத்துக்கொரு பாலம் – நாராயண் தேசாயுடன் சந்திப்பு”, “போரும் அகிம்சையும் – காஷ்மீர் குறித்து காந்தி”, “ஒளிர்மண மலர்கள்” மற்றும் “From Reality to Truth” ஆகிய நூல்களோடு காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோர் குறித்து இளைஞர்களுக்கான வாழ்க்கை வரலாற்று நூல்களும் இவரது ஆக்கங்களாக வெளிவந்துள்ளன. திருக்குறளையும் பிற தமிழ்ப் படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் “Revolutionary Gandhi” மற்றும் “The Cambridge Companion to Gandhi” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
நூல் பற்றி:
இந்நூலைப் பதிப்புத்துள்ள பாரதிய வித்யா பவன் காந்தியடிகளைப் பற்றி பல நூல் தொடர்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் வெளியிட்டுள்ளது. தற்போதும் கூட அதன் தொடர்ச்சியாக, காந்தியடிகளின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, அவரைப் பற்றி பல்வேறு இந்திய மொழிகளில் எழுத்துலகம் எவ்வாறெல்லாம் அவரைப் பற்றி சிந்தித்திருக்கிறது என்பதை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அம்மொழிகளில் வந்த காந்தியடிகள் பற்றிய படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்தவற்றை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதில் முதல் வெளியீடாக தமிழ், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உள்ள படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வெளியீட்டில், காந்தி பற்றிய தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு “Mahatma Gandhi in Tamil” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியராக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களும், படைப்புகளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராக இந்த வார பேச்சாளர் திரு த.கண்ணன் அவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள்.
தொகுப்பாசிரியர் பற்றி:
காரைக்குடியைச் சேர்ந்த இந்நூலின் தொகுப்பாசிரியர் திரு. சுனில் கிருஷ்ணன் அவர்கள் தொழில் முறையில் ஆயுர்வேத மருத்துவர். இவரின் “அம்புப்படுக்கை” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் “யுவபுரஸ்கார்” விருதைப் பெற்றுள்ளார். காந்திக்கென்றே பிரத்தியேகமான “காந்தி இன்று” (http://www.gandhitoday.in) என்ற இணையதளத்தை 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்த இணைய தளத்தில், காந்தி குறித்து பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், நூல் அறிமுகம் உள்ளிட்டவை தொடர்ந்து வெளியாகிவருகிறது. புனைவு மற்றும் காந்தி என இரு தளங்களில் எழுத்துலகில் இயங்கி வருகிறார். “அன்புள்ள புல் புல்”, “ஆயிரம் காந்திகள்”, ”நாளைய காந்தி”, “காந்தி எல்லைகளுக்கு அப்பால்” ஆகியவை காந்தியடிகள் குறித்த இவரது நூல்கள் ஆகும்.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
9790740886 (ம) 9952952686