Skip to content

C Rajendiran

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (11.07.1925 – 15.04.1995) மயிலாடுதுறை மாவட்டம் திருவாளப்புத்தூருக்கு அருகில் உள்ள நடுத்திட்டு எனும் சிற்றூரில் பிறந்தவர். சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் ரங்கநாதன். அண்ணாமலைப்… Read More »தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கலைஞர் மு. கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி (03.06.1924 – 07.08.2018) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் இணையருக்கு மகனாகத்  தோன்றியவர்;  தமிழக முதல்வராக ஆறுமுறை இருந்த  பெரும் சிறப்புக்குரியவர்; கவிஞராக,  எழுத்தாளராக,  சிறுகதை ஆசிரியராக,  புதின… Read More »கலைஞர் மு. கருணாநிதி

கோவை இளஞ்சேரன்

கோவை இளஞ்சேரன் (04.01.1923 – 17.10.1999) இராமநாதபுரம் மாவட்டம் கல்லல் எனும் ஊரில் பிறந்தவர். கோ. வைத்தியலிங்கம், மீனாட்சியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தையாரின் பெயரில் உள்ள இரு எழுத்துகளைச் சேர்த்து ‘கோவை’ எனத்… Read More »கோவை இளஞ்சேரன்

பேராசிரியர் டாக்டர் சுந்தர. சண்முகனார்

பேராசிரியர் டாக்டர் சுந்தர. சண்முகனார் (30.07.1922 – 30.10.1997) இவர் கடலூர், புதுவண்டிப்பாளையம், சுந்தர முதலியார் – அன்னபூரணி இணையரின் மகனார். அறிவுக்கடல் ஞானியாரடிகளின் மாணவர்.  75 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த தமிழறிஞர். மயிலம்,… Read More »பேராசிரியர் டாக்டர் சுந்தர. சண்முகனார்

புலவர் ஜெ.பானுராசனார்

புலவர் ஜெ.பானுராசனார் (7.2.1925-14.5.2004) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அகரகொரக் கோட்டைக் கிராமத்தில் திருமிகு. ஜெயராவ் நைனார் திருமதி. சுந்தரம்மாள் இணையருக்கு 7-2-1925 அன்று பிறந்தவர். புகழ்பெற்ற மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ்வித்துவான் பட்டம் பெற்றவர்.… Read More »புலவர் ஜெ.பானுராசனார்

வழக்கறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன்

வழக்கறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் (1921)    1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1949… Read More »வழக்கறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன்

இரா. நெடுஞ்செழியன்

இரா. நெடுஞ்செழியன் (11.07.1920 – 12.01.2000) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 11.07.1920 ஆம் தேதி இராசகோபாலனார் – மீனாட்சி சுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இரா.கோ.நாராயணசாமி என்பதே ஆகும். பின் நாட்களில் பகுத்தறிவு தந்தை பெரியாரின் திராவிட சித்தாந்தக்… Read More »இரா. நெடுஞ்செழியன்

பேராசிரியர் D.I. ஜேசுதாஸ்

பேராசிரியர் D.I. ஜேசுதாஸ் பேராசிரியர் D.I. ஜேசுதாஸ் அவர்களைப் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. தமிழுக்குப் பங்களித்தவர்களாக ஏசுதாஸ் என்ற பெயரில் மூன்று பேராசிரியர்களின் பெயர்கள் கிடைக்கின்றது. ஒருவர் திருச்சி பிஷப் ஹீபர்… Read More »பேராசிரியர் D.I. ஜேசுதாஸ்

டாக்டர் எஸ்.எம்.டயஸ், ஐ.பி.எஸ்.,

டாக்டர் எஸ்.எம்.டயஸ், ஐ.பி.எஸ்., (04.12.1919 – 2000) திரு எஸ்.எம். டயஸ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பேட்டில் பிறந்தவர். திருச்சி செயின்ஜோசப் கல்லூரியில் கணிதவியலில் பட்டம் பெற்றவர். சிலகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். டேராடூனில் உள்ள… Read More »டாக்டர் எஸ்.எம்.டயஸ், ஐ.பி.எஸ்.,

பெரும் புலவர் து.சு. கந்தசாமி முதலியார்

பெரும் புலவர் து.சு. கந்தசாமி முதலியார் (14.04.1892 – 27.06.1954) திருமதி சுப்பம்மை, திரு சுப்பிரமணிய முதலியார் இணையருக்கு 14-04- 1892 அன்று கந்தசாமியார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில்… Read More »பெரும் புலவர் து.சு. கந்தசாமி முதலியார்