Skip to content

திரு. அருணா பொன்னுசாமி,கரூர்

திரு. அருணா பொன்னுசாமி, கரூர்

தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தீவிர திருக்குறள் பரப்புரையாளராக நான் கண்டது கரூர் அருணா பொன்னுசாமி ஐயா வைதான். சங்கப் பணியில் எவ்வளவு முதன்மையாக இருந்தாரோ அதே அளவு சமுதாயப் பணியிலும் இலக்கியப் பணியிலும் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அருணா. 10 பேர் கூடும் செயற்குழுவிலும் 100 பேர் கூடும் பொதுக்குழுவிலும் 1000 பேர் கூடும் மாநாடுகளிலும் அருணாவின் குரல் ஒலி தனித்துவமாகத் தெரியும்.

கலைஞர் பற்றாளர் எனபதால் இப்போது அக்கழகத்தின் இலக்கிய அணிப் பொறுப்பிலும் இருக்கின்றார். இவை எல்லாவற்றையும் விட திருக்குறள் பரப்புரையில் மேலை பழனியப்பனோடு இணைந்து திருக்குறள் நூல்களை ஐம்பதினாயிரம் வரை தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் கொடுத்தார், கொடுக்கிறார் எனபது தான் என்னை கவர்ந்தது. இலவசமாக திருக்குறள் நூல்களை வழங்கியபோது வாங்காமல் பயந்து ஓடியவர்களைப் பற்றியும் சொன்னார். பின்பு வீடு தேடிவந்து நூற்றுக்கணக்கில் வாங்கியவர்களைப் பற்றியும் சொன்னார்.

ஒரு வங்கியின் உதவியுடன் தனது உரையோடு திருக்குறளை வெளியிட்டு வழங்குவதோடு திருக்குறள் மாநாடுகள், மாற்றும் இயக்கங்களுக்கும் உதவி செய்கிறார். கரூரில் நங்கள் நடத்திய மாநாட்டுக்கு உதவியாக 300 நூல்களை வழங்கி உதவி செய்தர். மருந்து வணிகத்திலும் சிறப்பாக செயல்பட்டு தன் பணி நிறைவுக்காலத்தையும் இளமையாக கழிக்கிறார் என்பதிலிருந்து அவரது தெளிவான சிந்தனையும் உறுதியான நடவடிக்கைகளும் தெற்றெனப் புலப்படுகிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலுள்ள தமிழாசிரியர்களுக்கு அறிமுகமான இவர் தன்னைப் போல மற்ற தமிழாசிரியர்களைத் திருக்குறள் பரப்புரையில் ஈடுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆளாக நான் இருப்பேன் தங்கள் ஊதியத்திலிருந்தும் ஓய்வுதியத்திலிருந்தும் 1 சதவீதம் கூட தொடர்ந்து உதவி செய்யாதவர்கள் தான் தமிழ்ப்படித்தவர்களாகவும் தமிழாசிரியர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் தமிழகத்தின் அவலம் . தமிழ்வழிக் கல்விக்காகவும் இவர்கள் போன்றவர்கள் தூண்டுதல் செல்லவேண்டும்.

திருக்குறள் தொண்டராக இத்தொகை வாயிலாக நான் விண்ணப்பிக்கும் வேண்டுகோள் இதுதான்.

அருணாவின் புகழ் ஓங்குக!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்