அரசியல் களம்… ஒரு கனவு
தளிர் விட்ட அவா
தன்னை முன்னிறுத்தாமல் தமிழை , மக்கள் நலனை முன்னிறுத்தி இகல் இல்லாமல் செயல்படும் தலைவர்கள் வேண்டும்.
திருக்குறளில் குடிமை இயல் (கயமை நீங்கலாக) குறிப்பாக “குடிசெயல் வகை”அதிகாரம் வாழ்வியலாகக் கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் . அறத்துப்பால், பொருட்பால் ( குறிப்பாக அரசியல் அமைச்சியல்) நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
(40-60 வயது)இளைஞர்கள் ,60-75 வயதினர் மற்றும் 75 வயதைக் கடந்தவர்கள் 1:1:1என்ற அளவில் அரசியல் கட்சிகளில் இருக்க வேண்டும்..
சட்ட மன்ற வேட்பாளர்களில் 40 -60 வயதினர் &60-75 வயதினர்2:1 என்ற அளவில் இருக்க வேண்டும். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது;அமைச்சராகப் பொறுப்பு ஏற்கக் கூடாது.
பொருளை ஆள்பவர்கள் வேண்டும்;
பொருளால் ஆளப்படுபவர்கள் வேண்டாம்.
தமிழால் உயர்ந்தவர்கள் ,தங்கள் தந்நலமற்ற பங்களிப்பை நல்க வேண்டும்.
குற்றம் இலானாய் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு” -1025
(யான் எனது என்னும் செருக்கு நீங்கி ,மனம், மொழி, மெய்களில் தூய்மை காத்து, )எவ்வித குற்றமும் இல்லாதவனாக தான் பிறந்த குடி உயர்வதற்காக வாழ்பவனை உலகம் தன் சுற்றமாகச் சூழ்ந்துகொள்ளும்
கனவு நனவாக மாறுமா….