Skip to content

திருமதி. சா. தமிழ்ச்செல்வி,திருவண்ணாமலை

திருமதி. சா. தமிழ்ச்செல்வி, திருவண்ணாமலை.

திருவண்ணாமலை நகரத்தில் ,”அண்ணாமலைக்கு அரோகரா” என்பது போல அல்லா கோவில் “லா இலாஹா இல்லல்லா” என்ற முழக்கத்தைப் போல திருக்குறள் முழக்கங்களை திருவள்ளுவர் கருத்துகளை அதிகாலையிலேயே ஒலிபெருக்கி வாயிலாக முழக்கி வருபவர். கேப்டன் சாமிநாதனின் திருமகள் தமிழ்ச்செல்வி. இந்திய போர்ப்படையில் உண்மையிலேயே கேப்டனாக விளங்கி ஓய்வு பெற்ற சாமிநாதன் ஊர்த் திரும்பியவுடன் அணிந்துக்கொண்டது திருக்குறளைத்தான். தன் உணவாகவும், மூச்சாகவும் கொண்டதும் திருக்குறள் தான். தன் பேச்சாகவும், செயலாகவும் கொண்டது திருக்குறள்தான்.

ஆட்சித்தலைவரானாலும், தானி ஓட்டுபவரானாலும் ஒரு திருக்குறளைச் சொல்லச் சொல்லி இனிப்புக் கொடுப்பது இவரது வழக்கம். “திருக்குறள் குடும்பம்” என்றே ஒரு அமைப்பை உருவாக்கி பல நூறு குடும்பங்களை திருக்குறள்பால் ஈர்த்தவர். திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலை தொடங்கும் இடத்தில்  திருவள்ளுவர் சிலையை நிறுவி திருவண்ணாமலைக்கே பெருமை சேர்த்தவர். இத்தகைய தொண்டருக்குத் தொண்டராக அவர்  வழியில் செல்லும் திருமகள் தமிழ்ச்செல்வி அமைந்தது திருக்குறள் தொண்டர்களுக்கெல்லாம் நற்பேறாகும்.

ஞாயிற்றுக் கிழமைதோறும் திருவள்ளுவர் சிலை முன்பு திருக்குறள் பாடி வருவோர் போவோர்க்கெல்லாம் பால், பழம் வழங்கும் தமிழ்ச்செல்விக்கு ஒரு நேர்ச்சையில் தலை முழுவதும் அடிப்பட்டும் பிழைத்துக் கொண்டார். என்பது திருவள்ளுவர் அருளால்தான். இதை என்னிடம் கூறும் போதெல்லாம் “என்னே திருவள்ளுவர் அருள்” என்பார். இத்தமிழ்ச்செல்வியை இத்தகைய தொகையில் இணைப்பது எனக்கு கிடைத்த பேறாகவே நான் நினைக்கிறேன். தமிழ்ச்செல்வியின் வழியில் ஒலிபெருக்கி வாயிலாகத் திருக்குறளை பரப்புவதை நாடு முழுவதும் கொண்டு செல்வோம்!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்