Skip to content

மருத்துவர் சு. கார்த்தி

மருத்துவர் சு. கார்த்தி (29.06.1983)

திருமதி. அமராவதி, திரு. சுப்பிரமணியம் இணையரின் மகனாக 29.06.1983 ஆம் நாளன்று பிறந்தவர். கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சோமனூர் இவரது சொந்த ஊர்.

பள்ளிப் படிப்புக்குப்பின் அரசு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவமும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிறப்பு மருத்துவமும் பயின்றார். தமிழும் மருத்துவமும் இரு கண்களாக இவரால் போற்றப்படுகின்றன. இணையத் தமிழில் ஆர்வம் உடையவர். சங்க இலக்கிய ஆர்வலர். மருத்துவத்தோடு தமிழ்த் தொண்டினையும் செய்து வருகிறார். சங்க இலக்கியப் பாடல்களுக்கு இவரால் புதுப்புது விளக்கங்கள் கிடைக்கக்கூடும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாமையாக வேண்டும்என்ற கருத்துடையவர். பொதுத் தொண்டு செய்வதில் ஆர்வமிக்கவர் இம் மருத்துவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995