பேராசிரியர் க.திருமுருகன் (01.03.1970)
பேராசிரியர் முனைவர். க. திருமுருகன் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் திரு கலிவரதன், திருமதி சாந்தகுமாரி இணையருக்கு 01-03-1970 அன்று மகனாகப் பிறந்தவர். பிரஞ்சு இலக்கியத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ் மற்றும் பிரிஞ்சு இலக்கியங்களில் உள்ள காதல் கவிதைகளை ஒப்பிட்டு (The concept of love in freench and tamil literature) ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
தற்போது புதுச்சேரி மையப் பல்கலைக்கழகப் பிரஞ்சு துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இருபத்தெட்டு ஆண்டுகள் பணியனுபவம் மிக்க இவர் பிரிஞ்சு, ஆங்கிலம், தமிழ் முதலான மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் அக இலக்கியங்கள் பற்றி பிரஞ்சு மொழியில் (Introduction to agam literature a book in freench) நூல் எழுதியுள்ளார். சங்க இலக்கியமான நற்றிணை பற்றியும் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘பிறகு’ புதினத்தையும் பிரஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்து வருகிறார்.