Skip to content

முனைவர் அ. நசீமா

முனைவர் . நசீமா (12.10.1969)

பேராசிரியர் நசீமா அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமதி அபூபக்கர் இணையருக்கு மகளாக 12.10.1969 இல் பிறந்தார். சென்னை மயிலாப்பூர் தூய எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும், கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் உயர்கல்வியும் பெற்றவர். எம்.., எம்.ஃபில்., பிஎச்.டி., ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

திருவள்ளுவர் விருது 2011, உமறுப்புலவர் விருது 2015, தமிழ்நிதி விருது 2016, சாதனையாளர் விருது 2018, ஊடக மாமணிச் சுடர் விருது 2019 ஆகிய விருதுகளைப் பெற்றவர். அகில இந்திய வானொலி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அவர் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பள்ளி கல்லூரி மாணவர்களை ஆற்றல் மிக்கவராக உருவாக்குவதில் துணை புரிந்து வருகிறார். தற்போது சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995