Skip to content

முனைவர் ரஹமத் பீபி

முனைவர் ரஹமத் பீபி (25.04.1968)

திரு. பீர்முகம்மது இணையரின் மகளாக 25.04.1968 இல் பிறந்தவர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு இவரது சொந்த ஊர். திருச்சி டால்மியா புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும், திருவையாறு அரசர் கல்லூரியில் எம்.., டிபிடி., பிபிடி., பிஎச்.டி., ஆகிய பட்டங்கள் பெற்றவர். தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சித்திரக்கவிச் சோலை, கட்டுரைக் கதம்பம், விசித்திரச் சித்திரக்கவிகள் ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர். இவை தவிர 96 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி கருத்தரங்குகளில் பொழிவாற்றியுள்ளார். பள்ளிகளுக்குச் சென்று ஏழை மாணவர்களுக்குக் குருதிக்கொடை வழங்கியும் பொதுத் தொண்டு புரிந்தவர். வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பங்குகொண்டு வருகிறார். திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர், கலைமணி, சித்திரக்கவி சகாப்தம் உட்பட 40 விருதுகளைப் பெற்றுள்ளார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995