Skip to content

பேராசிரியர் சா. சண்முகம்

பேராசிரியர் சா. சண்முகம் (23.03.1955)

திருமதி. சா. இலட்சுமி அம்மாள் திரு. . சாமிநாதப் பிள்ளை இணையரின் மகனாக 23.03.1955 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆலத்தூரில் பிறந்தார்.

ஆலத்தூர் நடுநிலைப் பள்ளிலும் மூரார்பாது அரச உயர்நிலைப்பள்ளிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் (சிக்கண்ணா) புகுமுக வகுப்பையும் சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலையும் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் அண்ணாமலைப் பல்கலையில் பி.எட்., எம்.எட்., பட்டமும் மதுரை காமராசர் பல்கலையில் எம்.ஃபில் பட்டமும் பெற்றவர்.

மேல்நாரியப்பனூர், தளி, சிறுகிராமம், பிரம்மகுண்டம் முதலான ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். ரெட்டியப்பட்டி சாமிகள் அறக்கட்டளை இவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்து சிறப்பித்தது.

கல்லைத் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார்.

தமிழாசிரியராகச் சிறக்கப் பணியாற்றியவர். திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995