Skip to content

பேராசிரியர் அர. வெங்கடாசலம்

பேராசிரியர் அர. வெங்கடாசலம் (25.01.1947)

திருமதி. அல்லியம்மாள் திரு. அரங்கசாமி இணையருக்கு 25.01.1947 அன்று அவிநாசி அருகே உள்ள சேவூரில் பிறந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஆய்வில் ஈடுபட்டார். ஆன்மிகம், ஆளுமை, கல்வி, உளவியல், மேலாண்மை முதலான துறைகளில் திருக்குறள் புதிர் தீர்வு என உளவியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

இவருடைய 1. திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் ஆய்வு, 2. வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, 3. Thirukkural – Translation – Explanation: A Life Skills Coaching Approach 4. திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை ஆகிய நான்கு நூல்களும் திருக்குறளில் உளவியல் சார்ந்தவை. இவருடைய Thirukkural – Translation-Explanation: A Life Skills  Coaching Approach என்ற ஆங்கில நூல் ஒவ்வொரு குறட்பாவையும் எவ்வாறு வாழ்வில் கடைபிடிப்பது என்பதைக் கற்பிக்கும் நூல்பல அதிகாரங்கள் முற்றிலும் புதிய பொருள் கண்டுள்ளன. திருக்குறளை ஆன்மீக உளவியல் நூல் என்கிறார். திருக்குறளில் புரட்சி ஏற்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆன்ம நலம் முழுமை பெற்றால் அந்த ஆன்மா பிறப்பில்லாத பெருவாழ்வினை எய்தி புத்தேள் உலகம் புகும்.

திருக்குறள் ஓர் ஆன்மிக உளவியல் நூல் என்ற அடிப்படையில் ஏறக்குறைய 400 குறட்பாக்களுக்கு இதுகாறும் யாரும் கூறாத வகையில், உளவியல் அடிப்படையில், திருக்குறளிலிருந்தே சொற்களுக்கு பொருள் கண்டு விளக்கம் கூறி உள்ளார். பல அதிகாரங்கள் முற்றிலும் புதிய பொருள் கண்டுள்ளன. புதிய வெளிச்சம் பாய்ந்துள்ளதுஇவர் உடல்நலக் குறைவு காரணமாக 22.10.2021 அன்று பெங்களூரில் இயற்கை எய்தினார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995