Skip to content

தவத்திரு தேமொழியார் சுவாமிகள்

தவத்திரு தேமொழியார் சுவாமிகள் (20.06.1930 – 29.07.1998)

தேசிங்கு மன்னன் ஆட்சி புரிந்த செஞ்சி மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள சொக்கப் பெருவளூரில் அரங்கசாமி, நல்லம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றியவர்உடன்பிறந்தோர் இருவர்தமையன் கோபால். தங்கை பொருட்செல்விஇவரின் இயற்பெயர் செயராமன்பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை இட்ட பெயர் தேமொழிஇவருக்கு மக்கள் மூவர்

புலவரேறு .ரா. முருகவேள்குலசை இராமநாத அடிகள்,   குருகுலம் அழகரடிகள், இலக்கணக் கடல் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளைமயிலை சிவமுத்துபேராசிரியர் சுப. அண்ணாமலைபேராசிரியர் சிதம்பரநாதன்பேராசிரியர் .சுப. மாணிக்கம்திருக்குறளார் வீ.முனுசாமி ஆகியோர் தொடர்பால் புலமை நலம் பூத்தது

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார்குருகுலம் அழகர் அடிகள் நடத்திய செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சொலல்வல்லர், சோர்விலர்.

1976 ஆம் ஆண்டு அருள்ஞானப் பெருவெளி என்ற ஆன்மிக அமைப்பை நிறுவினார்ஒவ்வொரு மாதமும்நிறைநிலா வழிபாடுநடைபெறும்ஆண்டுதோறும் சித்திரை மாத நிறைநிலா வழிபாடு நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெறும்அறிஞர் பலர் உரையாற்றுவர்பலமுறை யானும் உரையாற்றியுள்ளேன்இவ்விழாவில் நல்லொழுக்கப் பயிற்சியோடு தீக்கையும் அளித்து அருளுவார்

இவரின் அருளாற்றலையும் ஆன்மிக உரையையும் இந்து நாளிதழ் தனது கடைசிப் பக்கத்தில் இவர்தம் சிந்தனைகளாகப் பல ஆண்டுகள் வெளியிட்டு வந்ததுஅமெரிக்காவிலுள்ள சிராகஸ் பல்கலைக்கழகம் இவரை அழைத்து மூன்று மாதம் தங்க வைத்துத் திருக்கோவையார் சிந்தனைகளைச் செவிமடுத்ததுஅவ்வுரையினை ஆங்கிலத்தில் தென்னிந்தியாவில் அன்பு  (Love in South India) என நூலாக வெளியிட்டது

திருமந்திரம்திருவாசகம்திருக்கோவையார்தேவாரம்பெரியபுராணம்திருவருட்பா  ஆகியன பற்றிப் பல்லாண்டுகள் தொடர் சொற்பொழிவாற்றி உள்ளார்கருமை நிறம்; அளவான உயரம்; ஒளி சிறந்த முகம்தெளிந்த சிந்தனை; அமைதி; பணிவு; பண்பு இவர்தான் தேமொழியார்வெள்ளை வேட்டி, வெள்ளைத் துண்டு. இரண்டு உடைகளே இவரது உடைமைகள்

பற்றற்ற உள்ளம்; பரமனை நாடும் இதயம்பிறருக்கு உதவும் எண்ணம்;   துறவு மனம்தூய நெஞ்சம்துன்பத்தைத் துடைக்கும் கை; துவளாமல் எங்கும் நடந்தே செல்லும் இயல்பு –  இவர்தான் தேமொழியார்

இவர் ஆற்றிய உரைகளைப்  பதிவு செய்து அவற்றை நூலாக்கி வருகிறார்கள் இவரின் அருமை சீடர்கள்திருக்குறள், திருவாசகம்திருமந்திரம் என உரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன

உண்பதில் அளவு; உடுப்பதில் அளவு; உறங்குவதில் அளவுதுய்ப்பதில் அளவு என அனைத்திலும் அளவோடு இருங்கள்என எனக்கு  உபதேசித்தவர்அவரின் அன்பைப் பெற்றுத் தீக்கைப் பெற்ற சீடர்களில் யானும் ஒருவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

இயற்கையின் நுட்பங்களையும் இறையாற்றலையும்  முழுமையாக உணர்ந்திருந்தும்  ஏதும் அறியாதவர் போல மக்களோடு மக்களாக இயல்பாக எளிமையாக வாழ்ந்து வளர்ந்து உயர்ந்த சித்தர்தான் தேமொழியார்தவத்திரு தேமொழியாரின்  இன்னுயிர் பிரிகிற நேரத்தில் (அருள்ஞானப் பெருவெளிஅய்யாவின் தவச்சாலை, புக்கத்துரை, செங்கல்பட்டு மாவட்டம்) 29.07.1998 அன்று மாலை 5.00  மணியளவில்  அவரின் பார்வையில் பட்டுத் தெரிந்த  அருளாசியின் கண்முன் நிற்கும் பேறு எனக்குக் கிடைத்தது

எந்தக் கருத்தினையும் வாழ்வியலோடு இணைத்து எடுத்துரைப்பார்அதனால் இவரை வாழ்வியற் புலவர் தவத்திரு தேமொழியார் சுவாமிகள் எனப்  போற்றி வணங்கினர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995