Skip to content

மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர்

மகாவித்வான் . தண்டபாணி தேசிகர் (02.04.1903 – 25.04.1990)

சிதம்பரத்தில் சடையப்ப தேசிகருக்கும் பாலம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர்சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் பயின்றவர். அப்போது அங்கு ஆசிரியராக இருந்த தமிழ்த் தாத்தா .வே.சா அவர்களிடம் தமிழ் பயின்றவர்சென்னைப் பல்கலைக்கழகத்தில்  1928 இல் வித்துவான் பட்டம் பெற்றவர். மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்

திருவாரூர் உயர்நிலைப் பள்ளிமீனாட்சிக் கல்லூரிதிருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிமதுரை ஆதீனக் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைப்  பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் பணியாற்றும்போது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவருடைய மாணவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்  தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும்போது (1954 – 1972) திருக்குறள் உரைவளம் கண்டார்மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் போது (1983 – 1988) அவை அச்சிடப்பட்டது. பின்னர் மதுரைப் பல்கலைக்கழகம் அவற்றைத் தொகுதி தொகுதியாக வெளியிட்டது

திருக்குறள் அமைப்பும் அழகும்திருக்குறள் உரைவளம்திருவாசகப் பேரொளி மற்றும் விளக்க உரை (பேருரை), சைவத்தின் மறுமலர்ச்சி என ஆழமாக நூல் எழுதிய பெருமகனார்

தமிழக அரசு 16.01.1988 இல் திருவள்ளுவர் விருதினை வழங்கிச் சிறப்பித்ததுதமிழ்ப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கிப் போற்றியதுமதுரை காமராசர் பல்கலைக்கழகம் பேராயச் செம்மல் எனும் விருதினை 1985 ஆம் ஆண்டு வழங்கியதுஇந்திய ஒன்றிய அரசு இவருக்குபத்மபூஷன்”  எனும் உயரிய விருதினை அளித்துப் போற்றியது. 150  நூல்கள் எழுதினார் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995