உதவியை அளக்க
அளவுகோல் ஏதாவதுஉண்டா?
சிறிய உதவி, பெரிய உதவி என்று ஏதாவது உண்டா?
கடலை விடப் பெரியது,
மலையை விட பெரியது,
உலகை விடப் பெரியது, என்றெல்லாம் வள்ளுவர் உதவியின் தன்மையை உவமைகள் கூறி
எடுத்துக் காட்ட முயன்றார்..
முடியவில்லை .
அப்புறம் கூறினார் “வையகத்தையும் வானகத்தையும்” ஒன்றாகக் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது என்றார்…
இப்படி எல்லாம், சொல்லிப் பார்த்தும் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை..
பொய்யாமொழிப் புலவரல்லவா…? அதே சமயம் முழுதாக உண்மையைக் கூற விரும்பினார்…
எனவே கூறினார், ஒரு உதவியை பெறுபவரின் மனநிலையைப் பொறுத்தே அந்த உதவியின் தன்மை/ உதவியின் அளவு/உதவியின் பரிமாணம் அமைகிறது என்று கூறி தீர்ப்பு எழுதி முடித்து விட்டார்…
உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து”
செய்ந்நன்றி அறிதல்.. குறள் 105..
வ சுப மாணிக்கம் தனது மாணிக்க உரையில் கூறுவார்” உதவி உதவிப் பொருளைப் பொறுத்ததன்று. உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது”..
பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்…
1969 ஆம் ஆண்டு பாடல்… கவிஞர் கண்ணதாசன்.. சுசீலா அம்மா குரலில்
குரல் : சுசீலா
பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. – மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..
(பனை)
பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் – அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்
தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ – அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ
(பனை)
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு – அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு – அது
(பனை)
நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் – அது
நல்லதைச் செஇதிட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்
சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் – நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்
இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ – நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..
நீங்க என்ன மரம் ?நாங்க பனை மரம்