வித்து என்ற சொல் மூன்று குறளிலும் ‘வித்தும்’ என்ற சொல் ஒரு குறளிலும் வந்துள்ளது ஒவ்வொரு குறளும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது
🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸
வித்து (3)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1
வித்தும் (1)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள் 9:5
http://tamilconcordance.in
🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸
மரத்திலிருந்து விதை விதையிலிருந்து மரம்
இல்லையில்லை…
விதையிலிருந்து தான் மரம் வரவேண்டிய அவசியம் என்றில்லை
விழுதுகளிலிருந்தும் மரம் வரலாம்…
கிளைகளை வெட்டி வைத்தாலும் மரம் வளரும் என்று மனித இனம் கண்டு கொண்டுள்ளது
.
ஆனால் வாழை மரம்
தனித்தன்மை கொண்டது..
வாழை மரத்திற்கு விதை கிடையாது அது வாழையடி வாழையாகத்தான் வரும்..அது ஒரு தொடர் கதை
இது ஒரு தொடர் நிகழ்வு..
குரு.. சிஷ்யன்.. குரு.. சிஷ்யன்.. குரு.. தொடர்கதையும் அப்படியே.
வாழை மரத்தில் எத்தனை பூக்கள் உள்ளது..
சிந்தித்தது உண்டா…
ஒரு பூ தானா…
வாழைமரம் ஆயிரமாயிரம் பூக்கள் கொண்டது..
ஒவ்வொரு பூவிலிருந்து வருவதுதான் ஒரு வாழைப்பழம்
வாழை மரத்தை ஞானிகளுக்கு (திருக்குறள் நீத்தார் பெருமையில் வரும் மாந்தர்கள் ) உதாரணமாகக் கூறுவது உண்டு
அது ஈரம் மிக்கது ஆயிரம் மலர்கள் மலர்ந்த நிலை மெய்யுணர்தல் நிலையைக் குறிக்கிறது.. சகஸ்ரராரத்தில் கூம்பிய வடிவில் உள்ள தாமரை மேல் நோக்கி விரிந்த நிலை..
எப்படி வாழை மரம் முற்றுமுழுதாக மனித இனத்திற்கு பயன்படுகிறது அதைப்போலவே ஞானியரும்…
அவர்கள் ஈர நெஞ்சினர்,
அருள் நெஞ்சினர். வாழைப் பழத்திற்கு விதை இல்லை. எனவே பிறப்பிரல்லை.. அதுபோலவே பிறப்பற்ற நிலையை அடைந்தவர்கள். .அறியாமை இருளை விலக்கத் துணை நிற்பவர்கள். தன்னை முற்று முதலாக கரைத்துக் (அழித்துக்) கொள்பவர்கள்.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரக்கூடிய தன்மை அனைத்தும் கொண்டவர்கள்
அவர்கள் மனித இனத்திற்கே ஒளிவிளக்காகத் திகழ்கிறார்கள். அத்கையவர்களைப் இறுகப் பற்றி, சிக்கெனப் பற்றி நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும்.
நமது வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ளவேண்டும். இவர்களது பெருமையைக் கூறும் அதிகாரமே நீத்தார் பெருமை. குருநாதர் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகள் அத்தகையவர். www.karursiddharbalusamy.org
கூடா ஒழுக்கத்தில் வரும் போலிகளிடம் நாம் ஏமாந்து விடக்கூடாது.. ஆனால், இன்றைய அவல நிலை அவர்களே ஊடகங்களில் முன்னிற்கிறார்கள்..
வள்ளுவரின் பாதம் பற்றி, விழிப்புணர்வோடு நாம் பயணிக்க வேண்டும்.
அன்புடன்
சி.இரா
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org
08/06/2022