Skip to content

வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.

 

 

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டில் இருபத்தைந்தாவது ஆண்டாக இப்போட்டி நடைபெறவுள்ளது. 1330 குறட்பாக்கள் ஒப்பிக்கும் ஒவ்வொரு மாணவர்க்கும் ரூ.2000/- பரிசு வீதம் மொத்தம் ரூ. 3,00,000/-
வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கவுள்ளார்.

திருச்சியில் உள்ள நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வெள்ளி விழா..

தந்நலமற்ற சேவையில் அறப் பயிர் வளர்க்கும் முயற்சியில் திருமூலநாதன் அறக்கட்டளையின் சமுதாயப் பணி..

நானிலம் போற்றத்நக்கது..

மாண்புமிகு நீதியரசர் அரங்க மகாதேவன் தலைமையில் சிறப்பாக, அரங்கன் , தாயுமானவர் அருளுடன் சிறப்பாக நடைபெறும்..

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. (குறள் – 1022)

‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத தொடர் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

விழா இறையருளால் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் பலப்பல.