Skip to content

கவிஞர் பாமாமணி இறையரசன்-திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்

  • by

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்

கவிஞர் பாமாமணி இறையரசன் ( அகவை 78.. 2021 )
கருவூர் வட்டம் சின்ன தாராபுரத்திலி ருந்து இப்பாவலர் இலக்கிய உலா வருகிறார் !

தனித் தமிழ் வேட்கையும் , இன , மொழி , நாட்டுணர்வும் ஏந்தி நிற்கும் ஏறு 1982 – இல் “குறளும் பொருளும்”என்னும் முதல் நூலைத் தமிழனைனையின்  மணிமகுடத்தில் பதித்தார் !

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்

இந்தக் குறளை இறையரசன்  தனது கவிதையின் மூலம் இவ்வாறு கூறுகிறார்

பிறர் உள்ளம் வருந்துகின்ற தீங்கு தன்னைப்
பிழைபட்டுக் காலையிலேயே செய்வானாயின்
பிறர் எவரும் செய்யாமல் தனக்குத் தீங்கு
பேரளவாய் மாலையிலே தாமே சேரும்

அம் மணி இவரை தமிழ்ப்பாவுலகில் மின்ன வைத்து உயர்த்துகிறது !

” செந்நீரில் மலரும் செந்தமிழ் ஈழம் ” என்னும் பா நூலை ஐவர் தொகுப் ஆசிரியராய்க் கொணர்ந்துள்ளார் . இது இரண்டாம் நூல் ! இவருடைய சிந்தனை யில் சுரப்பெடுத்த சிந்தனை ஊற்று ” மூன்றாம் நூல் ! இது தமிழர் கைவேல் ! பருகிடப்பால் !!

நான்காம் படைப்பு  “நாலும் பொருளும்” ! – இந்நூலுக்கு பேராசிரியர் க அன்பழகனார் அரிய ஆய்வுரை பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்துரை, சிலம்பொலி செல்லப்பனார் அணிந்துரை, செந்தமிழ் அந்தணர் இரா இளங்குமரனார் வரலாற்று முன்னுரை , பெரும்புலவர் தங்கவேலனார் கடவூர் மணிமாறனார், பரமத்தி சண்முகம் குமர நடவரசு ஈவப்பனார், புதுமதியனார், இராம சுப்ரமணியனார் பாராட்டுரை களும் நல்கியுள்ளனர்.

இந்நூல் , தமிழ் அன்னையின் பொன் நெற்றியில் இவர் பதித்த வைர மணித் திலகமாகத் திகழ்கிறது !

தமிழ் இனத்தலைவர் , கலைஞர் அவர்கள் , இவரின் முதல் நூலை வெளியிட்டு , முத்தான முன்னுரையும் தந்து பாராட்டுப் பட்டயம் பல தந்துள்ளார் ! இணையற்ற தமிழ் அறிஞர்கள் இவர் பாடல்களைப் பாராட்டியுள்ளனர் !

செந்தமிழ்ச் செல்வி , தென்மொழி , தமிழ்நிலம் , குறளியம் , குறள்மணம் , வண்ணப்பூங்கா , கவிக்கொண்டல் , குறள்வழி , தென்னகம் , அஞ்சுகம் மலர்கள் , மகாசனம் , முரசொலி , தினகரன் , கவிதைவகுப்பு ஏர்உழவன் , அறிமுகம் . பாசறை , அ.ம.ப.க. புதுநானூறு இரண்டாம் தொகுதி இன்னும் பல ஏடுகள் , நூல்கள் இவரது படைப்பைப் பதித்துள்ளன !

1990 இல் உலகப் பாவலர் பேரவை முதல் மாநாட்டில் , உவமைப் பாவலர் திரு . சுரதா அவர்கள் இவருக்குப் ” பா( கவி )மாமணி ” பட்டம் வழங்கினார் ! 1991 இல் தமிழக அரசும் – புதுவை அரகம் பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவரையும் தேர்வு செய்து பரிசும் பாராட்டுப் பட்டயமும்  , பொன்னாடையும் வழங்கியுள்ளன ! பல பாடல் போட்டிகளில் பரிசுகள் வென்றவர் !