எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்த்தாய் விருது – 2023
விருது பெறும் அமைப்பு :
தென்காசித் திருவள்ளுவர் கழகம்
தகுதியுரை
பொங்கு தமிழ்ப் பொதிகையில் பிறந்து, புஞ்சந்தனத்தில் தோய்ந்து, குற்றாலக்குளிர் சாரலில் நனைந்துவரும் தென்றல் வீசும் தென்காசித் திருநகரில் திருவள்ளுவர் கழகம் 1927இல் தொடங்கப்பட்டது. இக்கழகம் தோன்றிய நாள் முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் பொதுக்கூட்டம் நடத்தி, திருக்குறளைப் பற்றி பேரறிஞர்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தச் செய்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கள் திருநாள் தமிழர்த் திருநாளாகக் கொண்டாடப்பட்டு தனி உரை. பாரம்பரிய நாட்டியம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளை மூன்று நாட்கள் நிகழ்த்தி வருகிறது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர். பொங்கல் திருநாள் அன்று அருகில் உள்மா கோயில்களுக்குச் சென்று புலவர்களைக் கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறது.
இக்கழகம் 1987ஆம் ஆண்டு முதல் மாணவர்களைக் கொண்டு திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி தொடர்ந்து நடத்திட உறுதுணை புரிந்து வருகிறது. வள்ளுவர் வகுத்துப் போந்த வாழ்க்கை நெறியினை மக்கள் கடைப்பிடித்தொழுகி உயர்ந்து உய்ய வேண்டும் என்ற சீரிய குறிக்கோளின் அடிப்படையில் திருவள்ளுவர் கழகம் செயலாற்றி வருகிறது.
தென்காசித் திருவள்ளுவர் கழகம் ஒல்லும் வகையெல்லாம் ஓயாது ஆற்றிவரும் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் வகையில் இக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வழங்கி விருதுத்தொகையாக ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலையும் கேடயமும் தகுதியுரையும் வழங்கிச் சிறப்பிக்கின்றது.
மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர்
(தட்டச்சு
நன்றி கணியன் கிருஷ்ணன்)
நூற்றாண்டு காண இருக்கும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தை வள்ளுவர் குரல் குடும்பம் வாழ்த்தி மகிழ்கிறது….