Skip to content

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட அறிவிப்புகள்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழு வள்ளுவம் சார்ந்த அறிவிப்புகள்…

வள்ளுவர் குரல் குடும்பம் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

The CM’s announcement at Kanyakumari to propagate and celebrate Thirukkural aligns with initiatives taken by District Collector Thiru VP Jayaseelan IAS ,in Virudhunagar District over the past two years.

It is gratifying to see that the initiatives have been elevated to a state-level scheme by the Honourable CM.

VoV Family express its gratitude to the Government of Tamilnadu.

Heartiest Congratulations to Thiru Jayaseelan VPJ IAS , District Collector Virudhunagar.

We are proud of you..

புதிய படகுகள்:
புதிதாக 3 படகுகள் வாங்கப்பட்டு, வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி வசதி மேம்படுத்தப்படும். பெருந்தலைவர் காமராஜர், தென்குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்ஷல் நேசமணி, திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயர்கள் இந்த படகுகளுக்கு சூட்டப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி:
திருக்குறளில் ஆர்வம், புலமை மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

அறிவுசார் போட்டிகள்:
ஆண்டுக்கு, 133 உயர்கல்வி நிறுவனங்களில் குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.

குறள் வாரம்: ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.

திருக்குறள் மாநாடு:
தமிழ் திறனறி தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவர்களுக்கான திருக்குறள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

குறள், உரை:
அரசு அலுவலகங்களில் எழுதப்படுவதுபோல, தனியார் நிறுவனங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் உரையை எழுத முயற்சி மேற்கொள்ளப்படும்.

வள்ளுவ அன்பர்கள் ,அரசின் இந்த அறிவிப்புகளை வரவேற்று தக்க முறையில் பயன் கொள்ள வேண்டும் என்பது என் அவா..

வள்ளுவர் குரல் குடும்பம் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது…

சி இரா
வள்ளுவர் குரல் குடும்பம்