திருக்குறள் என்றாலே என் நினைவில் வந்து நிற்பவர் . நடுவண் அரசின் சுங்கத்துறையில் தென் இந்திய மாநிலங்கள் அனைத்திற்குமான தலைமை ஆணையராகப் பொறுப்பில் இருந்த போதே எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையை மேற்கொண்டிருந்தவர் பணி ஓய்வுக்குப் பின் முழு நேரப்பணியாகிவிட்டது
திருக்குறள் பற்றி எத்தனை எத்தனை நிகழ்வுகள் முன்னெடுப்புகள் என்று அவர்தம் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை வியக்காமல் இருக்க முடியாது
எங்கள் அழைப்பை ஏற்று ஒரு சிக்கலான தருணத்தில் கூட வந்திருந்து திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்திச் சென்றதை எங்களால் மறக்க முடியாது. .
சேலம் அரசு கல்லூரியில் கணிதவியல் பயின்றவர் பின்னர் தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாகத் திருக்குறளில்—அது கற்பிக்கும் வாழ்நெறியை இறுகப்பற்றிய படி வாழ்பவர் . திருவள்ளுவருக்காகக் கோவில் எழுப்பியவர். பாமரருக்கும் பரிமேலழகர் என்று மூன்று தொகுதிகளாக அவர் எழுதிய நூல் திருக்குறள் கற்பித்தலுக்கு ஒரு மிகப்பெரிய கொடை .அவருடைய துணவியார் இந்த நூலாக்கத்தில் பேருதவி செய்துள்ளார் அத்துடன் திருமதி மலர்க்கொடி இராசேந்திரன் நிழல்காட்டும் நிஜங்கள் என்னும் தலைப்பில் திருக்குறளின் 108 அதிகாரங்களின் கருத்தை ஒட்டி 120 சிறுகதைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார் . இதற்கான அவர்தம் பிள்ளைகள் கார்த்திக் , கிருத்திகா இருவரும் நூலாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள் .
கார்த்திக் கிருத்திகா இருவரும் எனது PPT .. content, sequencing, pictorial depiction இவற்றில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்
இப்படி குடும்பமே திருக்குறள் மணம் கமழ் இருப்பது
எவ்வளவு சிறப்பானது—Voiceofvalluvar.org என்னும் இணைய தளம் திருக்குறள் பற்றி உலக அளவில் கிடைக்கும் எல்லா நூல்கள்/ கட்டுரைகள்/தரவுகளை த் தொகுத்து வெளியிட்டு வருகிறது
இந்த நூலுக்கு கோட்டோவியம் 124 வரைந்தவர் கோவை முருகேசன் என்ற செவித்திறன் குறைந்த அச்சுத் தொழிலாளர்.. முதல் 108 அதிகாரங்கள்.. 124 கதைகள் , 124 ஒரு பக்க படங்கள் = கோவை விஜயா பதிப்பகம் திரு வேலாயுதம் மிக அழகாக நூலை பதிப்பித்துள்ளார்
========================
http://xn--voiceofvalluvar-z70b.org/ என்னும் இணைய தளம் திருக்குறள் பற்றி உலக அளவில் கிடைக்கும் எல்லா நூல்கள்/ கட்டுரைகள்/தரவுகளை த் தொகுத்து வெளியிட்டு வருகிறது
திருக்குறள் பணியாலும் தம் அறவாழ்வின் சிறப்பாலும் எங்கள் மிக மதிப்புக்குரிய நண்பர் திரு இராசேந்திரன் இணையர் நெடுங்காலம் பெருவாழ்வு வாழ எங்கள் வாழ்த்தியல் வணக்கங்கள்
முல்லை ஆதவன்—அமிர்தசோதி—சிகாகோ 2024-12-12
===================
https://www.facebook.com/share/1G16EKEzBN/
ஏற்கனவே நான் எழுதிய மகிழ்தல் உணர்வை மேற்காணும் இணைப்பில் பதிவு செய்திருப்பதை மீண்டும் பிதுப்பிக்கிறேன்