Skip to content

இந்த வருடம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் கூறியதன் ஒரு பகுதியை வள்ளுவரே கூறியுள்ளார்…..

This year’s laureates have provided new insights into why there are such vast differences in prosperity between nations. One important explanation is persistent differences in societal institutions.

By examining the various political and economic systems introduced by European colonisers, Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson have been able to demonstrate a relationship between institutions and prosperity.

They have also developed theoretical tools that can explain why differences in institutions persist and how institutions can change.

Their insights regarding how institutions influence prosperity show that work to support democracy and inclusive institutions is an important way forward in the promotion of economic development
குறள் 740:

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

மணக்குடவர் உரை:
மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு.

இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
வேந்து அமைவு இல்லாத நாடு – வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே – மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).

சாலமன் பாப்பையா உரை:
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

Explanation:
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of a Righteous Rulers.

https://www.nobelprize.org/prizes/economic-sciences/2024/popular-information/