- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-81 20/09/2024
September 20 @ 6:30 pm - 7:45 pm
வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-81
குன்றக்குடி அடிகளார் குறள் கட்டுரைகள் சிறப்புத்
தொடர்-1
கட்டுரை: வாதவூராரும் வள்ளுவரும் (தொகுதி 15-குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை)
ஆசிரியர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நயவுரையாளர்: செல்வி உமாநந்தினி பாலகிருஷ்ணன்
நாள்:- 20/09/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ மெய்யியலாளர், தமிழறிஞர், சமூகப்பணியாளர் என்றறியப்பட்டதோடு, திருக்குறளை திக்கெட்டும் கொண்டு சென்றவர். திருவள்ளுவர் காட்டும் அரசியல்,
குறட்செல்வம், திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு எனப் பல திருக்குறள் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் அடிகளாருக்கு வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 52. அனைத்து நூல்களும் தொகுக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6,000 பக்கங்களில் வெளிவந்துள்ளன (மணிவாசகர் பதிப்பகம்).‘வாதவூராரும் வள்ளுவரும்’ என்ற கட்டுரை 15வது தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
நயவுரையாளர் குறிப்பு:
செல்வி உமாநந்தினி உடுமலைப் பேட்டை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதுகலை பயிலும் மாணவி.
திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் திருமுறை நேர்முகப் பயிற்சி மையங்களில் திருமுறை பயிற்றுவிக்கும் ‘ஓதுவார்’. கொரோனா காலத்தில் உலக நன்மைக்காக 18,326 திருமுறை பாடல்களையும் பண்ணோடு பாடியவர். இந்தியப் பாராளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் ஐந்து ஓதுவார்களுடன் அரசின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேவாரம் பாடியவர். வேலூர் பாலாற்றுத் திருவிழாவில் ‘திருமுறை அருட்செல்வி’
என்ற விருதினை முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் பெற்றவர். ‘திருமுறைச்செல்வி’, ‘தேவார இசை அரசி’, ‘பண்ணிசை செல்வி’ உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றவர்.