- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-80 13/09/2024
September 13 @ 6:30 pm - 7:45 pm
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-80
நூல்: எது வியாபாரம் எவர் வியாபாரி
ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
நயவுரையாளர்: திருமதி
க. வெற்றிச்செல்வி
நாள்:- 13/09/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், தானே ஒரு வியாபாரி என்பதால் இந்நூலை மிகவும் சுவைப்பட எழுதி உள்ளார். வியாபாரத்திற்கான ஒரு சூத்திரமாக–கோட்பாடாகவே இந்த நூலை கடைப்பிடிக்கலாம்.
இந்நூலில் வியாபாரம் பற்றி மட்டும் கூறாமல், சேமிப்பு பற்றியும் விளக்கி உள்ளார்.
தன் வாழ்க்கையில் நடந்த நிறைய சுவாரசியமான நிகழ்ச்சிகளைக் கலந்து, திருக்குறளில் உள்ள வியாபாரம் சார்ந்த செய்திகளை வழங்கியுள்ளார். வியாபாரத்துக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொருவருடைய வீட்டின் வரவு செலவுகளைத் திட்டமிடுவதற்கும் இந்த நூல், வழிகாட்டியாக அமையும்.
நயவுரையாளர் குறிப்பு:
திருமதி க.வெற்றிச் செல்வி அவர்கள், முத்தமிழ்க்காவலர் அவர்களின் பெயர்த்தி.
தமிழ் மீது உள்ள பற்றுதல் காரணமாக, தன் பெயரை வெற்றிச்செல்வி என ஆக்கிக் கொண்டவர்கள். இவர் ஒரு மனநல ஆலோசகர் ஆவார். திருமணத்துக்கு பின்னர் 20 ஆண்டுகள் துபாயில் வசித்து, பின்னர் சென்னை வந்து தீவிர அரசியலிலும் ஐந்தாண்டு காலம் ஈடுபட்டிருந்தார். மனநல ஆலோசகர் என்ற அடிப்படையில் “மதிப்புக்குரிய மழலைகள்” எனும் குழந்தைகளுக்கான நூலை எழுதியுள்ளார். தற்சமயம் காஞ்சிபுரத்தில் வசித்து வரும் இவர், ஒரு பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார் அவர்களின் தீவிர பற்றாளர். அந்த உந்துதலால், தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.