நம் ஊரில் எல்லா பள்ளிகளிலும் இதைச் செய்யலாமே!
அரசு நடவடிக்கை எடுக்குமா?
பள்ளிக் கல்வித் துறை உள்வாங்கி செயல்படுத்துமா??
19 வயது கூட நிரம்பாத சிறுவன் மோகன்தாஸ் “நான் என் வாழ்க்கையில் மது குடிக்க மாட்டேன்” என்று அம்மாவிடம்
5.8.1888 ஆம் ஆண்டு (காந்தியடிகள் )தன்னுடைய தாயார் புத்திலி பாய்க்கு லண்டன் செல்லும் முன் சத்தியம் செய்து கொடுத்தார்.
அந்த தினத்தை புத்திலி பாய் தினமாக ஆண்டு தோறும் சேவாலயா தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சேவாலயா நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் பிற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களுடைய அம்மாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த மாணவர்கள் தன் அம்மாவிடம் “நான் என் வாழ்க்கையில் மது குடிக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுக்கும் நாளாக இன்று அனுசரித்தார்கள்.
இந்த விழாவில் காந்தி கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரேமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவினைத் தொடர்ந்து சேவாலயாவின் உதவியுடன் நடத்தி வருபவர் G.ராம் மோகன் அவர்கள்.
சேவாலயாவின் நிர்வாக அறங்காவலர் முரளி அவர்களின் முயற்சியால் மிகவும் ஒரு பயனுள்ள, காந்திய சிந்தனையை வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிகழ்வாக, இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.